பாலியல் ஆற்றம் குறையும் என்ற தவறான கருத்தால் 20 முதல் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடையே தடுப்பூசி செலுத்துவதற்கான ஆர்வம் குறைவடைந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜெயசுமன தெரிவித்தார்.
கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொள்வதால், பாலியல் ஆற்றல் குறைவடையும் என்று சமூக ஊடகங்களில் பரவும் வதந்திகளை அடுத்தே, இளைஞர்களிடையே தடுப்பூசியை ஏற்றிக்கொள்வதற்கான ஆர்வம் குறைந்துள்ளதாக கூறினார்.
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,
தடுப்பூசியை ஏற்றிக்கொள்வதால், பாலியல் ஆற்றல் குரைறவடைந்து மலட்டுத் தன்மையை அதிகரிக்கிறது என பொய்யான கட்டுக்கதைகள் இளைஞர்கள் மத்தியில் பரப்பப்படுகிறது.
இவ்வாறான கதை பரவியவுடன், இது தொடர்பான உலகலாவிய ஆராய்சிசிகளின் முடிவுகளை பார்த்தோம். அதில் அத்தகைய கருத்தோ அறிக்கையோ எங்கும் வெளியிடப்படவில்லை. எனவே, இதுவொரு கட்டுக்கதை ஆகும் என்றார்.
மேலும், மாணவர்களுக்கு தடுப்பூசி போட வேண்டும் என்ற நிலைப்பாடு வந்துள்ளது. இதில் ஆரம்ப வகுப்பு, முன்பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்கு தடுப்பூசி தேவையில்லை. ஏனென்றால், சிறுவயது பிள்ளைகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவது குறைவு எனவும், இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.