அருண் விஜய் நடித்த பார்டர் டிரைலர்!

Date:

அருண் விஜய் ஆரம்பகாலங்களில் அதிகமான படங்களில் நடித்திருந்தாலும், அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படத்தில் நடித்ததன் மூலமே தமிழ் ரசிகர்களின் கவனம் இவரது பக்கம் திரும்பியது. அதன் பின்னரே இவருக்கு ஏராளமான பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியது.

சமீப காலமாக இவரது நடிப்பில் வெளியான படங்கள் ஓரளவிற்கு நல்ல வெற்றியை பெற்று வருகிறது. தற்போது அருண் விஜய் அவரது மாமாவும், பிரபல இயக்குனருமான ஹரி இயக்கத்தில் புதிய படமொன்றில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

அருண் விஜய் நடிப்பில் நடிகர் சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள ஓ மை டாக் படம் விரைவில் ஓடிடியில் வெளியாக உள்ளது. இதுதவிர தனது வெற்றிப்பட இயக்குனருடன் அருண் விஜய் இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்துள்ளார்.

ஏற்கனவே அருண் விஜய் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற குற்றம் 23 படத்தை இயக்கிய இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் மீண்டும் அருண் விஜய் ஒரு படத்தில் நடித்துள்ளார். அவருக்கு நாயகியாக நடிகை ரெஜினா நடித்துள்ள இப்படத்திற்கு ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

பார்டர் என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. எனவே படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக பார்டர் படத்தை வெளியிட தடை கோரி டோனி சினிமாஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சார்லஸ் ஆண்டனி சாம், சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் படத்தின் டிரைலர் தற்போது வெளிவந்து சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது.

spot_imgspot_img

More like this
Related

வாசுதேவ நாணயக்கார இலங்கையின் இடதுசாரி அரசியல் வரலாற்றில் முக்கியமானவர் – பிரதமர் ஹரிணி

இலங்கையின் மூத்த அரசியல்வாதியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார, இலங்கையின்...

கல்முனை பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்ற மீலாதுன் நபி கந்தூரி

மீலாதுன் நபி பெருவிழாவை சிறப்பிக்கும் வகையில் கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆப் பெரிய...

ஆலிம்களும் புத்திஜீவிகளும் சமூக வழிகாட்டலில் இணைந்து செயற்பட வேண்டும் — பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாஸில்

ஆலிம்களும் சமூகத்தின் அறிவுசார் வளமாக விளங்கும் புத்திஜீவிகளும் இணைந்து செயற்பட்டு, சமகால...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்