வவுனியாவில் ஆலய பிரதம குரு ஒருவரால் பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றிற்கு வீடு வழங்கப்பட்டுள்ளது.
வவுனியா, ஆசிகுளம் கிராமசேவகர் பகுதிக்குட்பட்ட கற்குளம் பகுதியில் பெண் தலைமைத்துவக் குடும்பம் ஒன்றிற்கு வவுனியா புதுக்குளம் சித்திவிநாயகர் மற்றும் மற்றும் கேவில்குளம் மஹாவிஷ்ணு ஆலயப் பிரதம குருக்களாக விளங்குகின்ற சிவஸ்ரீ ஜெ.மயூரக்குருக்கள் அவர்களினால் புதிய வீடு ஒன்று கட்டி அக் குடும்பத்திற்கு கையளிக்கப்பட்டது.
சுவிஸ் நாட்டில் வாழும் பாலேஸ்வரன் அவர்களின் உதவியோடு ஆலய பிரதம குருவால் இவ்வீடு அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் வவுனியா மாவட்ட உதவி பிரதேச செயலாளர் திருமதி மு.சபர்ஜா, செட்டிகுளம் பிரதேச செயலக இந்துகலாசார உத்தியோகத்தர் சிவகஜன் மற்றும் மாவட்ட பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் லதா ஆகியோர் கலந்து கொண்டனர்.
தற்காலிக வீடு ஒன்றில் மழை மற்றும் வெயிலுடன் தமது பிள்ளைகளையும் வைத்துக் கொண்டு பல்வேறு கஸ்ரங்களை எதிர்நோக்கிய பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றிற்கே குறித்த வீடு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.