புலிகளின் போர்க்குற்ற விசாரணை கோரப்பட்டிருந்தது- சிறிதரன்; கோரவில்லை- சுமந்திரன்; எனக்கு தெரியாதென்கிறார் கட்சித் தலைவர்!

Date:

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனினால் அனுப்பப்பட்ட கடிதம் எனது மின் அஞ்சலுக்கு பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனினால் அனுப்பப்பட்டிருந்தது. அதில் விடுதலைப்புலிகளின் போர்க்குற்றங்களும் விசாரிக்கப்பட வேண்டும் என்றிருந்தமையால் நாம் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை என கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்திருந்தார்.

இதேவேளை இந்த விடயம் தொடர்பில் யாழ்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், ஐநாவுக்கு அனுப்பபட்ட கடிதத்தில் விடுதலைப்புலிகளையும் விசாரிக்க வேண்டும் என்று கோரப்படவில்லை எனத் தெரிவித்திருந்தார்.

குறுகிய நேர இடைவெளியில் இடம்பெற்ற இந்த இரண்டு ஊடகவியலாளர் சந்திப்புக்களில், ஒரே கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் நேரெதிரான கருத்துக்களை தெரிவித்திருந்தனர்.

ஒரே கட்சியின் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேரெதிரான வேறுவேறு கருத்துக்களை தெரிவித்துள்ள நிலையில், இதில் எது உண்மையான கருத்து என, இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவை இன்று (11)தொடர்பு கொண்டு கேட்ட போது,

பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனின் கருத்து தொடர்பில் நான்
அறிந்திருக்கவில்லை. அது தொடர்பில் நான் ஆராய்ந்துவிட்டே கூறுகிறேன்.

அனால் நாங்கள் எந்தச் சந்தர்ப்பத்திலும் விடுதலைப்புலிகளை விசாரிக்க வேண்டும் என்று கோரவில்லை. இதுதான் உண்மை. பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் அவ்வாறு கூறியிருந்தால் அது தொடர்பில் கட்சியின் அரசியல் குழுவில் ஆராயப்படும் எனத் தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

ஆயுதப்பற்றாக்குறையால் ஈரானுக்கு எதிரான தாக்குதல்களை இடைநிறுத்த முடிவு: ட்ரம்ப்பிற்கு ஏற்பட்ட அவல நிலை!

தொடர்ச்சியாக 13 நாட்கள் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்குப் பிறகு, ஈரான் மீதான தாக்குதல்...

ரோஹன விஜேவீர குடும்பத்திற்காக ரூ.26 மில்லியன் செலவு

மறைந்த ஜனதா விமுக்தி பெரமுன (ஜேவிபி) நிறுவனர் ரோஹன விஜேவீரவின் குடும்பத்தைப்...

ஜனாதிபதி சட்டத்தரணி தகுதிக்கு 20 ஆண்டுகள் பணி அனுபவம் கட்டாயம்!

ஜனாதிபதி சட்டத்தரணிகள் (PC) நியமனம் குறித்த திருத்தப்பட்ட வர்த்தமானி அறிவிப்பின்படி, ஜனாதிபதி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்