கடந்த ஓகஸ்ட் 31 ஆம் திகதியன்று, பேருவளை கடலில் 288.644 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்ட சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியை கைது செய்ய பொதுமக்களின் உதவி கோரப்பட்டுள்ளது.
“பொப் மார்லி” என்றழைக்கப்படும் களுத்துறை சந்தித தாப்ருவே என்பவரே தேடப்படுகிறார்.
அவரை யாராவது கண்டால், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பொலிஸ் போதைப்பொருள் பணியகம், 071-8592727 அல்லது 011-2343333-4 என்ற இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு அறிவிக்குமாறு பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
ஓகஸ்ட் 31 ஆம் திகதியன்று, பேருவளை கடலில் வைத்து 288.644 கிலோ கிராம் ஹெரோய்ன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. சந்தேகத்தின் பேரில் ஐவரும் கைது செய்யப்பட்டனர்.
இந்தப் போதைப்பொருள் கடத்தலின் பிரதான சூத்திரதாரியாக “பொப் மார்லி” யே இருந்துள்ளார்
எண் 128/09, நிசான்சாலா மாவத்தை, தலஹேனா, மலம்பே மற்றும் எண் 522/1/2, சல்மால் மாவத்தை, உடுமுல்ல, பத்தரமுல்ல ஆகிய முகவரிகளை கொண்ட 41 வயதானவர் இவர்.
தேசிய அடையாள அட்டை எண்: 198017101618/801711618 v.
அவர், நீண்டநாள் மீன்பிடியில் ஈடுபடுவதை தொழிலாக செய்கின்றார். பொலிசார் தேடுவதை அறிந்ததும், தலைமறைவாகி விட்டார்.




