நியூஸிலந்தில் டெல்டா பிறழ்வினால் பாதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்துள்ளார். அந்த நாட்டில் பதிவான முதலாவது டெல்டா தொற்று மரணம் இதுவாகும்.
அங்கு மேலும் 20 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இவை ஒக்லாந்தில் பதிவாகின.
90 வயதான மூதாட்டியொருவரே உயிரிழந்துள்ளார். அவருக்கு ஏற்கனவே சில நோய்கள் இருந்ததாகச் சுகாதார அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
அந்நாட்டில் பெப்ரவரி மாதத்தின் நடுப்பகுதியிலிருந்து நேற்றுவரை கொரோனா தொற்றினால் மரணங்கள் ஏற்படவில்லை.
வயதானவர்களை கோவிட் 19 தொற்று எளிதில் பாதிக்கும், அதன்மூலம் பெருமளவில் பாதிப்பு ஏற்படக்கூடும் என்பதை நியூஸிலந்துப் பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் சுட்டிக்காட்டியுள்ளார். ஆதலால் முடக்கநிலை நடப்பில் இருப்பது அவசியமானது என்றும் அவர் விளக்கினார்.
இதற்கிடையே, நியூஸிலந்தில் டெல்டா பிறழ்வினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைகிறது.
எனினும், நியூஸிலந்தின் மிகப்பெரிய நகரான ஒக்லாந்தில் கடந்த மாதம் நடுப்பகுதியில் இருந்து கடுமையான 4ஆம் கட்ட முடக்க நிலை அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது.