உலகம்

நியூசிலாந்தில் 5 மாதங்களின் பின் முதலாவது கொரோனா மரணம்!

நியூஸிலந்தில் டெல்டா பிறழ்வினால் பாதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்துள்ளார். அந்த நாட்டில் பதிவான முதலாவது டெல்டா தொற்று மரணம் இதுவாகும்.

அங்கு மேலும் 20 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இவை ஒக்லாந்தில் பதிவாகின.

90 வயதான மூதாட்டியொருவரே உயிரிழந்துள்ளார். அவருக்கு ஏற்கனவே சில நோய்கள் இருந்ததாகச் சுகாதார அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

அந்நாட்டில் பெப்ரவரி மாதத்தின் நடுப்பகுதியிலிருந்து நேற்றுவரை கொரோனா தொற்றினால் மரணங்கள் ஏற்படவில்லை.

வயதானவர்களை கோவிட் 19 தொற்று எளிதில் பாதிக்கும், அதன்மூலம் பெருமளவில் பாதிப்பு ஏற்படக்கூடும் என்பதை நியூஸிலந்துப் பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் சுட்டிக்காட்டியுள்ளார். ஆதலால் முடக்கநிலை நடப்பில் இருப்பது அவசியமானது என்றும் அவர் விளக்கினார்.

இதற்கிடையே, நியூஸிலந்தில் டெல்டா பிறழ்வினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைகிறது.

எனினும், நியூஸிலந்தின் மிகப்பெரிய நகரான ஒக்லாந்தில் கடந்த மாதம் நடுப்பகுதியில் இருந்து கடுமையான 4ஆம் கட்ட முடக்க நிலை அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

‘என் அனுமதி இல்லாமல் என்னை பெற்றெடுத்திருக்கிறார்கள்’: பெற்றோர் மீது வழக்கு தொடர்ந்த பெண்!

Pagetamil

லத்வியாவுக்குள் ஆட்கடத்தலில் ஈடுபட்ட 5 இலங்கையர்கள் கைது!

Pagetamil

அமெரிக்காவில் வீதியில் பாலியல் வன்கொடுமைக்குள்ளான பெண்!

Pagetamil

‘இஸ்ரேலின் தற்காப்பை உறுதி செய்யும் ஆயுதங்களை வழங்குகிறோம்’: அமெரிக்கா

Pagetamil

ரஃபாவை துண்டாடியது இஸ்ரேல்!

Pagetamil

Leave a Comment