பேஸ்புக் நிறுவனம் அதன் தலைப்புப் பரிந்துரைகளுக்கான அம்சத்தை இரத்து செய்துள்ளது.
அந்த அம்சத்தின் முக அடையாள செயற்கை நுண்ணறிவு அமைப்பு, காணொளி ஒன்றில் இருந்த கருப்பின ஆடவர்களைத் தவறுதலாகக் குரங்குகள் என்ற தலைப்பின் கீழ் சேர்த்துவிட்டது.
அதனையடுத்து, பேஸ்புக் பேச்சாளர் ஒருவர் அந்தத் தவற்றை ஏற்றுக்கொள்ளமுடியாதது, அதுபோன்ற பரிந்துரைகளைச் செய்துகொண்டிருந்த மென்பொருள் செயலிழக்கச் செய்யப்பட்டது என தெரிவித்துள்ளார்.
அதோடு, அந்நிறுவனம், அனைவரிடமும் மன்னிப்புக் கேட்டுக்கொண்டது.
அதுபோன்ற மென்பொருள் வெள்ளையினத்தைச் சேராதவர்களின் அடையாளத்தைச் சரிவரக் கண்டறிவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டு வருவதால் அதனை மனித உரிமை ஆர்வலர்கள் குறைகூறியுள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1