தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனுக்கு கைபேசியை வழங்கியதாகக் கூறப்படும் கொழும்பு மகசீன் சிறைச்சாலையில் பணியாற்றிய ஒரு சிறைச்சாலை உத்தியோகத்தர் இடம் மாற்றப்பட்டுள்ளார்.
சிறைச்சாலை பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க, ஒழுக்காற்று விசாரணையின் பின்னர் வவுனியா சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டதாக தெரிவித்தார்.
இந்த சம்பவத்தில் சிறைச்சாலை உத்தியோகத்தருக்கு தொடர்பு இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டது என்றார்.
பாராளுமன்ற உறுப்பினர் பதியுதீனிடம் நேற்று கையடக்க தொலைபேசி கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1