பதிலில்லாத தொலைபேசி; உறக்கத்திற்கு போனவர் சடலமாக மீட்பு: நடந்தது என்ன?

Date:

முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்கு பிரதேசத்திற்குற்பட்ட கரும்புள்ளியான் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் இன்று மதியம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

மூன்று பிள்ளைகளின் தந்தையான செல்வராசா விவேகானந்தராசா (43) என்பவரே தனது வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கடந்த சில வருடங்களாக அவர் மனைவியை பிரிந்து, மகனுடன் வசித்து வருகிறார்.

நேற்று இரவு அவர் வீட்டில் உறங்கச் சென்றுள்ளார். வீட்டிற்கு எதிரிலுள்ள அப்பம்மா வீட்டில் மகன் உறங்கச் சென்று விட்டார்.

இன்று காலையில் விவேகானந்தராசாவுடன் தொடர்புடைய ஒருவர், மகனை அழைத்து, தந்தையின் தொலைபேசி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்ததையடுத்து, மகன் வீட்டுக்கு சென்றுள்ளார்.

இதன்போதே, தந்தை உயிரிழந்த தகவல் தெரிய வந்துள்ளது.

நேற்று நள்ளிரவில் அவர் உயிரிழந்திருக்கலாமென கருதப்படுகிறது.

அவரது கழுத்தில் சிறிய குத்துக்காயம் தென்படுகிறது. உடலின் சில பகுதிகளில் இரத்தக்கறை தென்படுகிறது.

குறித்த சம்பவம் கொலையா? தற்கொலையா என்ற கோணத்தில் மல்லாவி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

spot_imgspot_img

More like this
Related

பெருமளவு போதைப்பொருளுடன் அழகுநிலைய ஜோடி கைது!

மாத்தறையில் அழகு நிலையம் நடத்தி வரும் தம்பதியினர், சுமார் 7 கோடி...

நேபாள பெருவெள்ளம்: இதுவரை 359 பேர் உயிரிழப்பு; 800+ பேரை தேடும் பணி தீவிரம்

நேபாள வெள்ளப் பெருக்கில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 359 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு...

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய இரதோற்சவம் கோலாகலம்!

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய இரதோற்சவம் கோலாகலம்! வரலாற்றுச் சிறப்புமிக்க தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்