24.4 C
Jaffna
January 28, 2025
Pagetamil
உலகம்

நடன அழகிகளை வாடிக்கையாளருடன் உறவு வைக்க வற்புறுத்திய கேளிக்கை மைய உரிமையாளர்களிற்கு சிக்கல்!

வாடிக்­கை­யா­ளர்­க­ளு­டன் பாலி­யல் உறவு வைத்­துக்­கொள்­ளு­மாறு தங்­க­ளி­டம் வேலை செய்­யும் நட­ன­ அழகிகளை வற்புறுத்திய சிங்கப்பூரின் இரண்டு  கேளிக்கை மைய         உரி­மை­யா­ளர்­க­ளுக்­குச் சிறைத் தண்­ட­னை­யும் அப­ரா­த­மும் விதிக்­கப்­பட்­டுள்­ளன.

சிங்கப்பூரை சேர்ந்த 60 வயது ராஜேந்­தி­ரன் நாக­ரத்­தி­னம் மீது ஆறு குற்­றச்­சாட்­டு­கள் சுமத்தப்­பட்­டி­ருந்­தன.

மற்­றொ­ரு­வ­ரான இலங்கைப் பின்னணியுடைய 46 வயது அரு­மைக்­கண்ணு சசி­கு­மார் மீது மூன்று குற்­றச்­சாட்­டு­கள் சுமத்­தப்­பட்­டி­ருந்­தன.

ராஜேந்­தி­ர­னுக்கு முத­லில் 30 மாதச் சிறைத் தண்டனை­யும் 3,000 வெள்ளி அபரா­த­மும் விதிக்­கப்­பட்­டன. அவர் மேல்­மு­றை­யீடு செய்­த­தைத் தொடர்ந்து உயர் நீதி­மன்­றம் சிறைத் தண்­ட­னையை 19 மாதங்­களா­கக் குறைத்­தது, அப­ரா­தத் தொகையை 2,500 வெள்­ளி­யா­கக் குறைத்­தது.

தற்போது, சிங்­கப்­பூர் நிரந்­த­ர­வா­சி­யான சசி­கு­மா­ருக்கு 16 மாதச் சிறைத் தண்­ட­னை­யும் 11,000 வெள்ளி அபரா­த­மும் விதிக்­கப்­பட்­டன. அவ­ரின் மேல்­மு­றை­யீட்டு மனு நிரா­க­ரிக்­கப்­பட்­டது.

‘கோலி­வுட்’ என்ற தங்­க­ளின் கேளிக்கை மையத்­திற்கு வரும் வாடிக்­கை­யா­ளர்­களை உல்லாசமாக வைத்திருக்க பல அழகிகளை நடனத்திற்காக பணிக்கமர்த்தியிருந்தனர்.

அவர்­களில் பங்­ளா­தே­ஷைச் சேர்ந்த இரண்டு பெண்­க­ளான அக்­தர் பித்தி, அக்­தர் டினா ஆகி­யோரை வீட்டு பணியாளர்களென அழைத்து, நடன அழகிகளாக பணிக்கமர்த்தினர். இந்த காலப்பகுதியில் வாடிக்­கை­யா­ளர்­க­ளு­டன் பாலி­யல் உறவு வைத்­துக்­கொள்­ளு­மாறு இருவரும் வற்புறுத்தியுள்ளனர்.

பித்தி செப்டம்பர் 7, 2015 அன்று சிங்கப்பூர் வந்தார். டினா ஜனவரி 16, 2016 அன்று வந்தார். அவர்கள் அப்போது 20 களின் நடுப்பகுதியில் இருந்தனர்.

சசிகுமார் தனது சம்பளத்தை நிறுத்திவிடுவார் என்று அச்சப்பட்டதால் பித்தி தயக்கத்துடன் இரண்டு வாடிக்கையாளர்களுடன் உடலுறவு கொள்ள ஒப்புக்கொண்டார். ஒவ்வொரு வாடிக்கையாளரும் அவருக்கு 500 சிங்கப்பூர் டொலர் செலுத்தினர், அதை அவர் சசிகுமாருக்கு அனுப்பினார்.

பங்­ளா­தே­ஷைச் சேர்ந்த ரோக்கி என்ற மற்­றோர் ஊழி­ய­ரின் உத­வி­யு­டன் ராஜேந்­தி­ர­னும் சசி­கு­மா­ரும் அப்­பெண்­களை பாலி­யல் உற­வில் ஈடு­ப­டு­மாறு கூறி­இருக்கின்­ற­னர்.

டினா பாலியல் உறவு வைத்துக்கொள்ள மறுத்தார். ராஜேந்திரன் 50 மற்றும் 100 டொலர் நோட்டுகளைக் காட்டிய பிறகும், வாடிக்கையாளர்களுடன் உடலுறவு கொள்ள டினா உறுதியாக மறுத்துவிட்டார்.

கோபமாக, அவரை அறைந்த ராஜேந்திரன், கழுத்தையும் நெரித்தார்.

பிப்ரவரி 11, 2016 அதிகாலையில், பித்தி, திடினா மற்றும் இரண்டு பெண்கள் அவர்கள் தங்கியிருந்த இடத்தை விட்டு வெளியேறினர்.

ஒரு நண்பரின் உதவியுடன், அவர்கள் தங்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை மற்றும் வாடிக்கையாளர்களுடன் உடலுறவு கொள்ள கட்டாயப்படுத்தப்பட்டதாக மனிதவள அமைச்சகத்திற்கு அறிக்கை அளித்தனர்.

பித்­தி­யைப் பாலி­யல் தொழி­லில் ஈடு­பட வைத்­தது, அதன் மூலம் கிடைத்த வரு­மா­னத்­தைப் பயன்­ப­டுத்­தி­யது, கைதா­வ­தி­லி­ருந்து தப்­பிக்க ரோக்­கியை சிங்­கப்­பூ­ரை­விட்டு வெளி­யேற ஏற்­பாடு செய்­தது உள்­ளிட்ட குற்­றச்­சாட்டு­களை ராஜேந்­தி­ர­னும், சசி­கு­மா­ரும் தற்போது எதிர்­நோக்­கி­யுள்ளனர்.

What’s your Reaction?
+1
2
+1
0
+1
0
+1
0
+1
1
+1
1
+1
0

இதையும் படியுங்கள்

நைஜீரியாவில் பெற்றோல் தீப்பற்றி வெடித்து விபத்து: 18 பேர் உயிரிழப்பு

east tamil

சூடானில் மருத்துவமனை மீது டிரோன் தாக்குதல் : 70 பேர் பலி

east tamil

சீனாவில் செயற்கை சூரியன் பரிசோதனை வெற்றி

east tamil

ரஷ்யாவில் மாபெரும் ட்ரோன் தாக்குதல்

east tamil

நேபாளத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த இந்தியர்

east tamil

Leave a Comment