காபூல் விமான நிலையத்தில் தற்கொலை தாக்குதல் நடத்த வாகனத்தில் சென்ற பல ஐஎஸ்ஐஎஸ் தற்கொலை குண்டுதாரிகளை, வான்வழி தாக்குதல் மூலம் கொன்றதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
இந்த தாக்குதலை தலிபான்களும் உறுதி செய்துள்ளனர்.
வாகனத்தில் கணிசமான அளவு வெடிபொருட்கள் இருப்பதை “குறிப்பிடத்தக்க இரண்டாம் நிலை வெடிப்புகள்” உறுதிசெய்ததாக அமெரிக்க இராணுவ அதிகாரி ஒருவர் கூறினார்.
இதேவேளை, காபூல் சர்வதேச விமான நிலையத்திற்கு வடமேற்கில் ஒரு ரொக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், குழந்தையொன்று உயிரிழந்ததாகவும் காபூல் பொலிஸ் பொறுப்பதிகாரி ரஷீட் தெரிவித்தார்.
Child was killed in a recent missile attack. #Kabul #Afghanistan pic.twitter.com/KsA8Pp80Aw
— Talib Times (@TalibTimes) August 29, 2021
விமான நிலையத்தில் இருந்து ஒரு கிலோமீற்றர் தொலைவில் இந்த தாக்குதல் நடந்தது. எந்தவொரு குழுவும் தாக்குதலிற்கு உரிமை கோரவில்லை.