ஏர்டெல், பி.எஸ்.என்.எல். மற்றும் ரிலையன்ஸ் ஜியோ உள்ளிட்ட நிறுவனங்கள் வைபர் தொழில்நுட்பத்தில் இணைய சேவையை வழங்கி வருகின்றன. சமீப காலங்களில் வைபர் சார்ந்த இணைய சேவையை பயன்படுத்துவோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது.
இரு சலுகைகளிலும் 3300 ஜி.பி. டேட்டா, ஓ.டி.டி. தளங்களுக்கான சந்தா, லேண்ட்லைன் இணைப்பு உள்ளிட்ட பலன்கள் வழங்கப்படுகின்றன. இதேபோன்ற சலுகைகளை ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனங்களும் வழங்கி வருகின்றன. எனினும், ஏர்டெல் மற்றும் ஜியோ சலுகை கட்டணங்கள் பி.எஸ்.என்.எல். வசூலிப்பதை விட அதிகம் ஆகும். மேலும் இந்த தொழில்நுட்பத்தில் இணைய சேவையை வழங்குவதில் பி.எஸ்.என்.எல். அதிக வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது.