நீர்த்தொட்டிக்குள் ஆணிண் சடலம்!

Date:

நுவரெலியா – பீட்ரூ தோட்டப்பகுதியை அண்மித்த பிதுருதலாகல பேணட் இயற்கை வனப்பகுதியில் உள்ள 30 மீட்டர் உயரமான லவர்சிலீப் இயற்கை நீர் வீழ்ச்சி பகுதியிலிருந்து இன்று (28) மதியம் ஆண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா மாநகர பிரதேசங்களான ஆவாஎலிய, மஹிந்த மாவத்தை, லவர்சிலிப் தோட்டம், பீட்ரூ தோட்டம் மற்றும் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலை பிரதேசம் ஆகிய பல பகுதிகளுக்கு குடிநீர் வழங்கும் பிரதான தண்ணீர் தாங்கியில் இந்த மனித சடலம் கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் ஆவா எலிய பகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான நமசிவாயம் அமிர்தலிங்கம் (42) என நுவரெலியா பொலிசார் தெரிவித்தனர்.

சடலம் நீர் தாங்கியின் இடுக்கில் சிக்கியுள்ள நிலையில் சடலத்தை மீட்கும் பணியை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் குறித்த பிரதான தண்ணீர் தாங்கியிலிருந்து நீர் வெளியேற்றப்படுகிறது.

அதேவேளை சடலம் கிடக்கும் பிரதான தாங்கியிலிருந்து மக்கள் குடிநீர் பாவனைக்காக வெளியேரும் தண்ணீரை உடனடியாக தடைசெய்துள்ள பொலிசார் பொது சுகாதார அதிகாரிகளின் கவனத்திற்கு இவ்விடயத்தை கொண்டு சென்றுள்ளனர்.

அத்துடன் இக் குடிநீர் பாவனையை தற்காலிகமாக நிறுத்தி கொள்ளுமாறு பிரதேச மக்களுக்கு விசேட அறித்தலும் விடுக்கப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

விஜய்யை வாழ்த்தியதால் அநுரவுக்கு வந்த சிக்கல்!

சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்க்கு ஜனாதிபதி அனுர...

கோட்டாவின் கொடூர பழிவாங்கலுக்கு பரிகாரம்: ஷானி அபேசேகரவிற்கு பதவி உயர்வு!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் இயக்குநரான ஷானி அபேசேகரவை, காவல்துறை பிரதிப் பொலிஸ்...

இளம் மனைவியை காணவில்லையென கணவன் முறைப்பாடு!

யாழில் இருந்து வவுனியா சென்ற வவுனியாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை காணவில்லை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்