எவ்வளவு பராமரிப்பு செய்தாலும் ஆண்டு முழுவதும் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் மந்தமான தோல் நோய்த்தொற்றுகளுக்கு காரணமாக இருக்கலாம். மாய்சுரைசர் பயன்பாடும் போதுமானதாக இல்லாவிட்டால் வறண்ட சருமம் நீங்க உணவுகளை சேர்க்கலாம். உணவுகள் மற்றும் பானங்கள் இரண்டுமே வறண்ட சருமத்துக்கு சிறந்த தீர்வாக இருக்கும். சருமம் பளபளப்பாகவும் குறையில்லாமலும் வைத்திருக்க உதவும் சிறந்த உணவுகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.
தண்ணீர்
உடல் ஆரோக்கியம் போன்று வறண்ட சரும ஆரோக்கியத்துக்கும் தண்ணீர் மிக முக்கியமானது. உடலை நீரேற்றமாக வைத்திருப்பதன் மூலம் உடலில் இருக்கும் செல்கள், வயதான தோற்றம் தடுப்பது மற்றும் உடலில் செல்களை சிறந்த முறையில் செயலாற்ற செய்யும். உடலில் போதுமான அளவு தண்ணீர் குடிக்கவில்லையெனில் இவை சருமத்தில் பாதிப்பை உண்டாக்கும். சருமத்தில் வறட்சி, பொலிவை இழக்க செய்யும். தினமும் 3 லிட்டர் தண்ணீராவது குடிக்க முயற்சி செய்யுங்கள்.
கொட்டைகள்
கொட்டைகளில் பாதாம், வால்நட், பைன் கொட்டைகள், முந்திரி போன்றவற்றை அடிக்கடி சேருங்கள். இவை எல்லாமே ஃபேட்டி ஆசிட் நிறைந்தவை. ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள் கொண்டவை. புரதம், விற்றமின் இ, விற்றமின் பி குழுமங்கள், மெக்னீசியம், செலினியம், காப்பர், இரும்புச்சத்து, துத்தநாகம், கால்சியம், பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து நிறைந்தவை. இவை இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகின்றன.. இவை சருமத்தை மென்மையாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க உதவுகின்றன.
அவகோடோ
ஒரு கப் அவகேடோ ப்யூரியில் 23 மைக்ரோகிராம் விற்றமின் சி உள்ளது. 4.8 மைக்ரோகிராம் வைட்டமின் எ, 16.1 அலகு விற்றமின் ஏ,48.3 அலகு விற்றமின் கே, ஒமேகா 3 கொழுப்பு மற்றும் ஃபோலேட் 183 அளவு உள்ளது. இவை எல்லாமே சருமத்திசுக்களை பாதுகாக்க செய்யும். சரும செல்களின் உற்பத்திக்கு உதவும். சருமத்தில் இருக்கும் சுருக்கங்களை போக்கும்.
ஆளி விதைகள்
ஆளி விதைகள் உடல் எடை குறைய, இதயத்தை பலப்படுத்த, புற்றுநோய் தடுக்க, சரும நோய்க்கு சிகிச்சையளிக்க என அனைத்துக்கும் உதவக்கூடும். இது உயர்ந்த அளவு ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள் கொண்டுள்ளது. லிக்னைன், பைட்டோஈஸ்ட்ரோஜன், புரதம் மற்றும் நார்ச்சத்து உள்ளது. ஆளிவிதையில் சரும எரிச்சல், கடினத்தன்மை யை குறைத்து சருமத்தை மென்மையாகவும் நீரேற்றமாகவும் வைத்திருக்கும்.
வாழைப்பழம்
வாழைப்பழம் விற்றமின் ஏ, பி, சி மற்றும் டி கொண்டுள்ளது. இது நியாசின், ரைபோஃப்ளேவின், தயமின், காப்பர், துத்தநாகம், இரும்புச்சத்து, மெக்னீசியம், கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், ஃபோலேட் மற்றும் நார்ச்சத்து கொண்டுள்ளது. இது உடலில் இருக்கும் கழிவை வெளியேற்றுகிறது. இது சருமத்தை பிரகாசமாக வைத்திருக்க செய்கிறது. தினமும் ஒரு வாழைப்பழ எடுத்துகொள்வதன் மூலம் சருமம் மென்மைக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைத்துவிடுகிறது. எனினும் இது குறித்து நிரூபனமான ஆய்வுகள் இல்லை.
சோற்று கற்றாழை
இவை மருத்துவ குணங்களை கொண்டவை. வறண்ட சருமத்துக்கு சிகிச்சையளிக்க இவை உதவுகிறது. சரும வியாதிக்கு சிகிச்சையளிக்க உதவும் பொருள்களில் இவையும் ஒன்றும். கற்றாழை லிப்பிட், நீர்ச்சத்து, விற்றமின் ஏ, சி, இ, பி12 மற்றும் கோலைன், தாதுக்கள், துத்தநாகம், காப்பர், பொட்டாசியம், மெக்னீசியம், செலினியம், குரோமியம், கால்சியம், அமினோ அமிலம், கிளகோசைட் கொண்டவை. இது சருமத்தை நீரேற்றமாக வைத்திருக்க செய்கிறது.