29.2 C
Jaffna
April 11, 2025
Pagetamil
விளையாட்டு

நீரஜ் சோப்ராவுக்கு பாராட்டு விழா!

டோக்கியோ ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் அசத்திய இந்தியாவின் நீரஜ் சோப்ரா, தங்கம் வென்று வரலாறு படைத்தார்.இவர், இந்திய ராணுவத்தில் சுபேதராக பணிபுரிகிறார். ஒலிம்பிக்கில் பங்கேற்ற தருண்தீப் ராய், பிரவிண் ஜாதவ் (வில்வித்தை), அமித் பங்கல், மணிஷ் கவுசிக், சதீஷ் குமார் (மல்யுத்தம்), தீபக் புனியா, அர்ஜுன் லால், அரவிந்த் சிங், விஷ்ணு சரவணன் (படகு) என ராணுவ வீரர்களுக்கு நேற்று புனேயில் பாராட்டு விழா நடந்தது. ராணுவ தலைமை தளபதி நரவானே, மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விழாவில் நீரஜ் சோப்ராவுக்கு ஈட்டி பரிசளிக்கப்பட்டது. இங்குள்ள ராணுவ விளையாட்டு மையத்துக்கு நீரஜ் பெயர் சூட்டி கவுரவிக்கப்பட்டது. ராஜ்நாத் சிங் கூறுகையில்,”விளையாட்டு வளர்ச்சிக்காக எதுவும் செய்யத்தயாராக உள்ளோம். இது இந்திய நட்சத்திரங்களுக்கும் தெரியும். பிரதமர் மோடி அனைத்து விளையாட்டுகளுக்கும் ஊக்கம் அளிக்கிறார். ஒலிம்பிக் போட்டி நடத்தும் வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைக்கும். அந்தத் தருணத்திற்காக காத்திருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படியுங்கள்

தோனி அவுட்டால் பிரபலமான ரசிகை: இன்ஸ்டாகிராமில் 4 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர்

Pagetamil

ஓய்வு குறித்து விராட் கோலி சூசகம்!

Pagetamil

ஓய்வு பெற்ற வீரர்கள் பங்கேற்கும் சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் விரைவில்

Pagetamil

இலங்கையின் முதல் டெஸ்ட்… 1996 உலகக் கோப்பை கப்டனின் உதயம்

Pagetamil

புரட்டியெடுக்கும் அவுஸ்திரேலியா: காலியில் கதிகலங்கி நிற்கும் இலங்கை!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!