சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் படம் விரைவில் வெளியாக உள்ளது. தற்போது டான் படத்தில் நடித்து வருகிறார். இதுதவிர அயலான் படம் அவர் கைவசம் உள்ளது. இந்நிலையில் சிவகார்த்திகேயன் அடுத்து புதிய கூட்டணி அமைக்க உள்ளார். வெந்து தணிந்தது காடு படத்தை இயக்கி வரும் கௌதம் வாசுதேவ் மேனன், அடுத்ததாக சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படம் இயக்க உள்ளார். இப்படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்கிறாராம். படம் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகலாம்.