27.1 C
Jaffna
December 18, 2024
Pagetamil
முக்கியச் செய்திகள்

கை, கால்கள் கட்டப்பட்டு வலையில் சுற்றப்பட்ட நிலையில் கரையொதுங்கிய சடலம்: மேலதிக பரிசோதனைக்காக கிளிநொச்சி அனுப்பப்பட்டது (PHOTOS)

கிளிநொச்சி பூநகரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சங்குப்பிட்டி கடல் பகுதியில் மீட்கப்பட்ட சடலம் உடல் கூற்றுபரிசோதனைக்குட்படுத்த கிளிநொச்சி வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டது.

பூநகரி சங்குப்பிட்டி கடற்பகுதியில் உருக்குலைந்த நிலையில் நேற்று மாலை சடலம் ஒன்று மிதந்த நிலையில் காணப்பட்டுள்ளது. அதன் கை, கால்கள் கட்டப்பட்டுள்ளதுடன், மீன்பிடி வலையினால் சுற்றப்பட்ட நிலையில் காணப்படுவதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

இது குறித்த தகவல் வழங்கப்பட்டதை அடுத்து நேற்று மாலை பூநகரி, சாவகச்சேரி பொலிஸார் மற்றும் கடற்படையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டுள்ளனர்.

மீன்பிடி வலைகள் சுற்றிய நிலையில் சடலம் காணப்பட்டது.

இன்று காலை 11.30 மணியளவில் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றின் பதில் நீதவான் சதீஸ்குமார் விஜயராணி முன்னிலையில் பூநகரி பொலீஸாரினால் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலம் காணப்படுவதனால் கொலையாக இருக்கலாமென பொலிசார் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

சடலம் மீட்கப்பட்டு உடல்கூற்று பரிசோதனைகளிற்காக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

சடலம் அடையாளம் காணப்படாத நிலையில் பூநகரி பொலிசார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை யாழ்ப்பாணம் கைதடி நாவற்குழி தெற்கு பகுதியைச் சேர்ந்த 72 வயதுடைய சதாசிவம் நாகராசா என்பவரை 26.04.2021 முதல் காணவில்லை என தெரிவித்து அவர்களின் உறவினர்கள் குறித்த பகுதிக்கு வந்திருந்தனர்.

நவற்குழி தெற்கிலுள்ள அவரது மகளின் வீட்டில் படுக்க சென்ற நிலையில் அவர் காணாமல் போயுள்ளதாக பொலிசாருக்கு குடும்பத்தார் தகவல் வழங்கியுள்ளனர்.

இந்த நிலையில் குறித்த சடலம் காணாமல் போனவருடையது என உறவினர்களால் அடையாளம் காட்ட முடியவில்லை.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

அர்ச்சுனாவை நாடாளுமன்றத்திலிருந்து தகுதி நீக்குங்கள்: மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு!

Pagetamil

புதிய சபாநாயகராக ஜகத் விக்ரமரத்ன தெரிவு!

Pagetamil

‘ரஷ்யாவிற்கு சென்றது திட்டமிட்ட நிகழ்ச்சியல்ல’: சிரிய முன்னாள் ஜனாதிபதி பஷர் அல்-அசாத்

Pagetamil

மீனவர் பிரச்சினைக்கு மனிதாபிமான முறையில் தீர்வு : இந்தியா – இலங்கை கூட்டறிக்கை

Pagetamil

நரேந்திர மோடி- அனுர சந்திப்பு!

Pagetamil

Leave a Comment