சர்வதேச காப்புரிமை அலுவலகத்தில் விவோ நிறுவன சாதனத்திற்கு காப்புரிமை வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த காப்புரிமை கழற்றக்கூடிய இன்-டிஸ்ப்ளே செல்பி கேமரா கொண்ட ஸ்மார்ட்போனிற்கு வழங்கப்பட்டு உள்ளது.
காப்புரிமை விவரங்களின் படி டிஸ்ப்ளேவில் உள்ள செல்பி கேமராவை ஸ்மார்ட்போனில் இருந்து கழற்ற முடியும் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. கழற்றக்கூடிய கேமரா மாட்யூல் ஸ்மார்ட்போனின் ஓரத்தில் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த டிசைன் ஸ்மார்ட்போனிற்கு புல் ஸ்கிரீன் அனுபவத்தை வழங்குகிறது. அன்டர் டிஸ்ப்ளே கேமரா தொழில்நுட்பம் கொண்ட ஸ்மார்ட்போன்கள் ஏற்கனவே விற்பனைக்கு வந்துள்ளன. காப்புரிமையில் இந்த கேமராவை எவ்வாறு கழற்ற வேண்டும் என்ற விவரங்கள் இடம்பெற்று இருக்கிறது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1