Pagetamil
விளையாட்டு

இடது கை பாட்ஸ்மனாக அவதாரம் எடுத்த அஷ்வின்!

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின், ஒரு வித்தியாச முயற்சியில் இறங்கியுள்ளார். இதற்காக அவர் தன் அணியின் சக வீரரான ஷிகர் தவானின் பாராட்டுகளையும் பெற்றுள்ளார். தற்போது இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. இதுவரை நடந்து முடிந்த 2 போட்டிகளிலும், தற்போது நடந்து வரும் 3வது போட்டியிலும் அஷ்வினுக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. இது ஒரு பக்கம் சர்ச்சையாகி வருகிறது.

இந்நிலையில் அஷ்வின், இங்கிலாந்தில் வலைப்பயிற்சியில் ஈடுபட்டபோது ஒரு புதிய முயற்சியை எடுத்துள்ளார். அவர் ஒரு புதுமைக்காக இடது கை பேட்டிங் பயிற்சி செய்துள்ளார். இது குறித்த படத்தை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் ஷிகர் தவான், ‘ஒரு இடது கை பேட்ஸ்மேனாக நன்றாக இருக்கிறீர்கள். கிளாஸி’ என்று கமென்ட் பதிவிட்டுள்ளார். அஷ்வினின் போஸ்ட்டும் தவானின் கமென்ட்டும் தற்போது வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்கள்

ஓய்வு குறித்து விராட் கோலி சூசகம்!

Pagetamil

ஓய்வு பெற்ற வீரர்கள் பங்கேற்கும் சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் விரைவில்

Pagetamil

இலங்கையின் முதல் டெஸ்ட்… 1996 உலகக் கோப்பை கப்டனின் உதயம்

Pagetamil

புரட்டியெடுக்கும் அவுஸ்திரேலியா: காலியில் கதிகலங்கி நிற்கும் இலங்கை!

Pagetamil

அவுஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம்: இத்தாலி வீரர் ஜன்னிக் சின்னர் சம்பியன்

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!