நடிகர் யோகி பாபு கட்டிய கோவிலில் குடமுழுக்கு விழா

Date:

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த மேல்நாகரம்பேடு கிராமத்தில் நடிகர் யோகிபாபு, வராகி அம்மன் கோவிலை கட்டியுள்ளார். இக்கோயிலின் குடமுழுக்கு விழா நேற்று நடைபெற்றது. விநாயகர் பூஜையுடன் யாக பூஜைகள் தொடங்கி நடைபெற்று வந்தது.

இதையடுத்து, புனித நீர் நிரப்பப்பட்ட கலசம் புறப்பாடு நடைபெற்றது. கலசத்தை நடிகர் யோகிபாபுவும் கொண்டு சென்றார். மங்கள இசை ஒலிக்க கோபுர கலசம் மீது புனித நீர் ஊற்றப்பட்டது. அதன்பிறகு, மகா தீபாராதனை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இந்த குடமுழுக்கு விழாவில் நடிகர் யோகிபாபு மற்றும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

 

 

spot_imgspot_img

More like this
Related

“கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ் அச்சுவேலி வைத்தியசாலையில் தூய்மைப் பணி

அரசாங்கத்தின் “கிளீன் ஸ்ரீலங்கா” (Clean Sri Lanka) வேலைத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்