என்ஜாய் என்ஜாமி பாடலின் மூலம் அனைவராலும் பேசப்பட்டவர்கள் தீ மற்றும் தெருக்குரல் அறிவு. சர்வதேச இசை இதழான ரோலிங் ஸ்டோனின் அட்டைப்படத்தில் தீ மற்றும் ஜான் வின்சென்ட் புகைப்படங்கள் மற்றும் இடம் பெற்று இருந்தது தற்போது இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச இசை இதழான ரோலிங் ஸ்டோனின் இந்திய பதிப்பின், ஆகஸ்ட் மாத அட்டைப் படத்தில் ‘எஞ்சாய் எஞ்சாமி’ ஆல்பம் பாடல் மற்றும் ‘நீயே ஒளி’ பாடலின் சாதனையை பாராட்டும் விதமாக, பாடகி தீ மற்றும் ஷான் வின்செண்ட் டீ பால் ஆகியோரது புகைப்படங்கள் வெளியிடப்பட்டிருந்தது.
இந்த இரண்டு பாடல்களின் பாடலாசிரியரும், எஞ்சாய் எஞ்சாமி பாடலை தீ-க்கு இணையாக பாடி புகழ்பெற்ற பாடகர், தெருக்குரல் அறிவின் புகைப்படம் இடம் பெறாமல் பாடகி தீ மற்றும் ஷான் வின்செண்ட் டீ பால் ஆகியோரது புகைப்படங்கள் மட்டுமே இடம் பெற்றிருந்தது தற்போது இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரது புகைப்படம் ரோலிங் ஸ்டோன் இதழின் அட்டை படத்தில் இடம்பெறாததற்கான காரணம் புரியவில்லை என இயக்குனர் பா.ரஞ்சித் கேள்வி எழுப்பினார். ஏற்கனவே ‘எஞ்சாய் எஞ்சாமி’ பாடலின் ஒவ்வொரு சாதனையின் போதும், தீ-யை மட்டுமே முன்னிறுத்துவதாகவும், தெருக்குரல் அறிவின் திறமைகள் மறைக்கப்படுவதாகவும் கூறப்பட்டுவந்த நிலையில், மீண்டும் ஒரு முறை அவரது அடையாளம் மறைக்கப்படுவதாக தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார் இயக்குனர் பா.ரஞ்சித்.
‘நீயே ஒளி’ என்ற பாடலை தெருக்குரல் அறிவுடன், ஷான் வின்செண்ட் டீ பால் எழுதி, அவரே பாடியிருந்தார். இந்தப் பாடல் சார்பட்டா பரம்பரை படத்திலும் இடம்பெற்றது. அந்த வெர்சனை அறிவு எழுதி, சந்தோஷ் நாராயணன் பாடியிருந்தார். என்ஜாய் என்ஜாமி பாடலுக்கு அறிவிற்கு சம்பளம் கொடுக்கப்படவில்லை என்ற சர்ச்சையும் தற்போது எழுந்துள்ளது. இதற்கு தயாரிப்பு தரப்பிலிருந்து தற்போது விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ரெவன்யூ சேரிங் என்ற முறையிலேயே இப்பாடலில் பணியாற்றிய அனைவருக்கும் ஊதியம் வழங்கப்பட்டுள்ளது. ஆகையால் தேவையற்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளது. தெருக்குரல் அறிவு தற்போது பல முன்னணி கதாநாயகர்களுக்கு பாடல்களை எழுதி வருகிறார். இதனால் என்ஜாய் என்ஜாமி பாடல் சர்ச்சையில் எதுவும் விளக்கம் அளிக்காமல் உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.