நட்சத்திர இயக்குனர்களின் கூட்டணியில் புதிய தயாரிப்பு நிறுவனம்!

Date:

தமிழ் சினிமாவின் நட்சத்திர இயக்குனர்கள் என்று சொல்லக்கூடிய மணிரத்னம், ஷங்கர், கவுதம் வாசுதேவ் மேனன், வெற்றிமாறன், லிங்குசாமி, மிஸ்கின், பாலாஜி சக்திவேல்,சசி, வசந்தபாலன்,ஏ ஆர் முருகதாஸ் மற்றும் லோகேஷ் கனகராஜ் என 11 இயக்குனர்கள் இணைந்து ரெயின் ஆன் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளனர். தரமான வெப்சீரிஸ் மற்றும் படங்களை இந்த தயாரிப்பு நிறுவனம் சார்பாக எடுக்க உள்ளனர். மேலும் இதில் உள்ள இயக்குனர்கள் அனைவருமே வேகமாக படங்களை எடுத்து முடிப்பவர்கள் என்பதால் அவர்களது இயக்கத்திலும் படம் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.

முதல் கட்டமாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரெயின் ஆன் பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக படம் தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதில் லோகேஷ் இயக்கத்தில் சூர்யா நடிக்க அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. தற்பொழுது லோகேஷ் கமலை வைத்து விக்ரம் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் விஜய் சேதுபதி, பகத் பாசில் என முன்னணி நடிகர்களும் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு சிறிது தினங்களில் காரைக்குடியில் ஆரம்பிக்க உள்ளது.

சூர்யாவின் நடிப்பில் சமீபத்தில் நவரசா என்ற தொடர் வெளியானது. ஜெய்பீம் என்ற படமும் நவம்பர் மாதம் ஓடிடியில் வெளியாக உள்ளது. தற்பொழுது பாண்டிராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் என்ற படத்தில் சூர்யா நடித்து வருகிறார். இதனை முடித்துவிட்டு வெற்றிமாறன் இயக்கத்தில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வாடிவாசல் திரைப்படத்திற்காக தயாராக உள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்த படங்களை முடித்துவிட்டு லோகேஷ் – சூர்யா இணைவார்கள் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் விஜய் வைத்து மாஸ்டர் படம் எடுத்த லோகேஷ் கனகராஜ் தற்பொழுது சூர்யாவுடன் இணைய உள்ள செய்தியை அறிந்து சூர்யா ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

எண்ணெய் உற்பத்தியை குறைத்த ஈரான்

அமெரிக்காவின் ஹோர்முஸ் ஜலசந்தி முற்றுகையால் ஏற்பட்ட அதிகரித்து வரும் சேமிப்பு நெருக்கடியைச்...

கிளிநொச்சியில் பிளாஸ்டிக் துப்பாக்கியுடன் மே தினத்திற்கு வந்தவர் கைது!

மே 1 அன்று கிளிநொச்சி டிப்போ சந்திக்கு அருகே நடைபெற்ற மே...

மனவைி விவகாரத்து கோரியதனால்  கோபத்தில்  தென்னைகளை வெட்டி வீழ்த்திய கணவன்

கிளிநொச்சி செல்வாநகர் பகுதியில் மூன்று பெண் பிள்ளைகளின் தாயான பெண்ஒருவர் தனது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்