ஸ்மார்ட் டி.வி. மாடல்களை அறிமுகம் செய்த சியோமி

Date:

சியோமி நிறுவனம் இந்தியாவில் புதிய எம்.ஐ. டி.வி. 5எக்ஸ் ஸ்மார்ட் டி.வி. மாடல்களை அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட் டி.வி. சீரிஸ் 43-இன்ச், 50-இன்ச் மற்றும் 55-இன்ச் அளவுகளில் கிடைக்கின்றன. மூன்று மாடல்களிலும் 4கே டிஸ்ப்ளே, விவிட் பிக்சர் என்ஜின் 2, டால்பி விஷன், ஹெச்.டி.ஆர். 10 பிளஸ் / ஹெச்.டி.ஆர். 10 என பல்வேறு அம்சங்கள் உள்ளன.

புதிய ஸ்மார்ட் டி.வி.க்கள் குவாட்கோர் மீடியாடெக் எம்.டி.9611 பிராசஸர், மாலி ஜி52 எம்.பி.2 ஜி.பி.யு. கிராபிக்ஸ், 2 ஜிபி ரேம், 16 ஜிபி மெமரி, ஆண்ட்ராய்டு 10 மற்றும் பேட்ச்வால் 4, ஹேண்ட்ஸ்-பிரீ கூகுள் அசிஸ்டண்ட் போன்ற அம்சங்களை கொண்டிருக்கின்றன. இவை ப்ளிப்கார்ட், எம்.ஐ. ஹோம், எம்.ஐ. ஸ்டூடியோ, குரோமா போன்ற விற்பனை மையங்களில் செப்டம்பர் 7 ஆம் திகதி விற்பனைக்கு வருகிறது.

புதிய ஸ்மார்ட் டி.வி. மாடல்களை வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 3 ஆயிரம் உடனடி தள்ளுபடி, எளிய தவணை முறை வசதி, வட்டியில்லா மாத தவணை போன்ற சலுகைகள் வழங்கப்படுகின்றன.

Share post:

spot_imgspot_img

More like this
Related

போக்குவரத்து விதிகளை மீறி ரிக்ரொக் வீடியோ: 3 யுவதிகள் கைது!

புத்தல-அம்பகொலவெவ வீதியில் தலைக்கவசம் அணியாமல், போக்குவரத்து விதிகளை மீறி மோட்டார் சைக்கிள்...

2 அணிகளாகப் பிரிந்தது அதிமுக: தற்காலிக பேரவைத் தலைவரிடம் பழனிசாமி, வேலுமணி தரப்பினர் தனித்தனியே கடிதம்

சட்டப்பேரவை அதிமுக குழுத் தலைவர் யார் என்பதில் பொதுச் செயலாளர் பழனிசாமி...

பொலிசார் பௌத்தர்களென்பதால் தையிட்டி விகாராதிபதிக்கு பயந்து செயற்படுகிறார்கள்: எம்.ஏ.சுமந்திரன்

பொலிஸார் பௌத்தர்களாக இருப்பதனால் , பௌத்த பீடாதிபதிகளுக்கு பயந்து சட்டத்தை நடைமுறைப்படுத்த...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்