யாழ் போதனா வைத்தியசாலையில் இன்று (26) மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனையில் 109 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று 443 பேரின் மாதிரிகள் சோதனையிடப்பட்டன.
யாழ் மாவட்டத்தில், பண்டத்தரிப்பு மாவட்ட வைத்தியசாலையில் 3 பேர், மருதங்கேணி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேர் (கணவன், மனைவி), நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேர், யாழ் மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 3 பேர், கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 10 பேர் (11 வயது சிறுமியும் உள்ளடக்கம்), யாழ் போதனா வைத்தியசாலையில் 16 பேர் (குருநகர் வாள்வெட்டில் உயிரிழந்த எட்மண்ட் ஜெரன்ஸ் என்ற 24 வயது இளைஞனின் இரண்டாவது பிசிஆர் பரிசோதனையிலும் தொற்று உறுதியானது, இராணுவச்சிப்பாய் ஒருவரும், பொலிஸ் உத்தியோகத்தரும் உள்ளடங்குகின்றனர்), நொதோர்ன் சென்ரல் வைத்தியசாலையில் ஒருவர், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் 2 பேர், பண்டத்தரிப்பு மாவட்ட வைத்தியசாலையில் 5 பேர், ஊர்காவற்துறை ஆதார வைத்தியசாலையில் 3 பேர் (26 வயதான தாயும், 2 வயது குழந்தையும் உள்ளடக்கம்), பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 2 பேர் (உயிரிழந்த 68 வயதான பெண்ணுக்கு தொற்று உறுதியானது), தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் 2 பேர், இளவாலை மாவட்ட வைத்தியசாலையில் 2 பேர் என 53 பேருக்கு தொற்று உறுதியானது.
முல்லைத்தீவு மாவட்டத்தில், மல்லாவி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 3 பேர், வெலிஓயா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேர், முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் 2 பேர் (சிறு குழந்தையொன்றும் உள்ளடக்கம்) என 7 பேருக்கு தொற்று உறுதியானது.
வவுனியா மாவட்டத்தில், வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 10 பேர், வவுனியா பொது வைத்தியசாலையில் 7 பேர் (17 வயதான சிறுவனும் உள்ளடக்கம்), பூவரசங்குளம் மாவட்ட வைத்தியசாலையில் ஒருவர், செட்டிக்குளம் ஆதார வைத்தியசாலையில் 7 பேர் (12 வயதான சிறுவனும் உள்ளடக்கம்) என 25 பேருக்கு தொற்று உறுதியானது.
கிளிநொச்சி மாவட்டத்தில், கரைச்சி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர், கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் 14 நாள் வயதான சிறு குழந்தை என 2 பேருக்கு தொற்று உறுதியானது.
மன்னார் மாவட்டத்தில், மன்னார் பொது வைத்தியசாலையில் ஒருவருக்கு தொற்று உறுதியானது.
இரணைமடு தனிமைப்படுத்தல் மையத்தில் 16 பேர், காங்கேசன்துறை கடற்படை தளத்தில் 4 பேர், முல்லைத்தீவு விமானப்படை தளத்தில் ஒருவருக்கு தொற்று உறுதியானது.



