மன்னாரில் மூத்த பிரஜைகளுக்கு வீடுகளுக்கு சென்று தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை

Date:

இவ் வாரம் தேசிய தடுப்பூசி வாரமாக பிரகடனப்படுத்தப்பட்ட நிலையில் நீண்ட கால சுகயீனமுற்ற முதியவர்கள் மற்றும் நோயினால் பாதிக்கப்பட்ட மூத்த பிரஜைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று(26) வியாழக்கிழமை மன்னார் மாவட்டம் முழுவதும் இடம் பெற்று வருகின்றது.

மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை மற்றும் பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரிகள் பணிமனை இணைந்து குறித்த தடுப்பூசி செலுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

மன்னார் நகர், முசலி, நானாட்டான், மடு, மாந்தை மேற்கு சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவில் முன்பதிவு மேற்கொண்ட 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த பிரஜைகளுக்கு அஸ்ராசெனிக்கா தடுப்பூசிகளின் முதல் தடுப்பூசி இன்றைய தினம் வீடுகளுக்குச் சென்று வழங்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக இவ்வாரம் முழுவதும் மூத்த பிரஜைகளுக்கு அவர்களின் வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இடம் பெறவுள்ளமை குறிப்பிடதக்கது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

இஸ்ரேல்- லெபனான் போர்நிறுத்தம் 45 நாட்கள் நீடிப்பு

இராஜதந்திர முன்னேற்றத்திற்கு மேலும் அவகாசம் அளிக்கும் வகையில், இஸ்ரேலும் லெபனானும் தங்களது...

ரவிமோகனுடன் பிரேக்-அப்? – சென்னையை விட்டு வெளியேறுவதாக கெனிஷா பதிவு

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் ஆர்த்தி ரவி - கெனிஷா...

எதிரிகள் போல நடித்து பொலிசாரை ஏமாற்றிய நண்பர்கள்

கொழும்பு குற்றப்பிரிவின் காவலில் உள்ள உஸ்மான் குணசேகர என்ற கம்பஹா உஸ்மான்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்