நயினாதீவில் மரணச்சடங்கிற்கு சென்ற 3 பேருக்கு தொற்று!

Date:

நயினாதீவில், மரண சடங்கில் கலந்துகொண்ட மூவருக்கு கொரோனோ தொற்று உறுதியாகியுள்ளது.

நயினாதீவில், கடந்த திங்கட்கிழமை (23) வயோதிப பெண்மணி ஒருவர், திடீரென ஏற்பட்ட சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.

அவரது மரண சடங்கில் ஊரவர்கள் கலந்துகொண்டிருந்தனர். இந்நிலையில் ஓரிரு நாள்களில் உயிரிழந்தவரின் சகோதரி உள்ளிட்ட சிலருக்கு திடீர் உடல்நல குறை ஏற்பட்டுள்ளது.

அதனையடுத்து, அவர்கள் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கென சென்றபோது, அங்கு அவர்களுக்கு பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. இதில், மூவருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.

இதை தொடர்ந்து, சுகாதார பிரிவினர் மேலதிக நடவடிக்கைளை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை திடீர் சுகவீனமுற்று உயிரிழப்பவர்களின் சடலங்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளும் நடைமுறை உள்ள போதிலும், திங்கட்கிழமை (23) உயிரிழந்த குறித்த வயோதிப பெண்மணியின் சடலத்துக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படவில்லை என, அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த வயோதிப பெண், கொரோனோ தொற்றினால் உயிரிழந்து இருக்கலாம் எனவும் அவரின் ஊடாகவே மரண சடங்குக்கு சென்றவர்களுக்கு தொற்று ஏற்பட்டு இருக்கலாம் எனவும், அப்பகுதி மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

அம்பாறை மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளராக சிரேஷ்ட அதிகாரி எஸ். கரன் நியமனம்

அம்பாறை மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளராக இலங்கை நிர்வாக சேவையின் முதலாம் தர...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்