ஒரு காலத்தில் முன்னணி நடிகராக இருந்த டி.ராஜேந்திரர் தற்போது திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். சினிமாவின் அனைத்து துறைகளிலும் முத்திரை பதித்த நடிகரான டிஆர் தற்போது சின்னத்திரையில் நுழைந்துள்ளார்.
விஜய் டிவியில் புது சீரியலில் தான் அவர் நடிக்கத் தொடங்குகிறார். சமீபத்தில் தொடங்கி இருக்கும் சர்ச்சை சீரியலான தென்றல் வந்து என்னை தொடும் என்ற சீரியலில் தான் அவர் நடிக்கிறார். அவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் ஒரு புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
இந்த சீரியலில் லோக்கல் ரொளடி ஹீரோ, பணக்கார பெண்ணான ஹீரோயினுக்கு கோவிலில் வலுக்கட்டாயமாக தாலி கட்டிவிட்டு ‘நீ என்ன இப்போ எனக்கு பொண்டாட்டியா’ என நக்கலாக கேட்பது போல வெளியாகி இருந்த ப்ரோமோவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. பெண்களுக்கு எதிரான குற்றத்தை இப்படி ஹீரோயிசம் என சித்தரிப்பது தவறு என நெட்டிசன்கள் கருத்து தெரிவிக்கிறது. எதிர்ப்பையும் மீறி தற்போது சீரியல் ஒளிபரப்பாகி வருவது பாதிக்கப்படுகிறது.