தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கை நீட்டிப்பதா இல்லையா என்பது குறித்த முடிவு வெள்ளிக்கிழமை (27) அறிவிக்கப்படும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன ஊடகங்களுக்கு தெரிவிக்கையில், வெள்ளிக்கிழமை நிலவரத்தை ஆராய்ந்த பின்னர் முடிவு எடுக்கப்படும் என்று கூறினார்.
தேசிய கோவிட் தடுப்பு குழு வெள்ளிக்கிழமை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய தனிமைப்படுத்தல் ஊரடங்கு ஓகஸ்ட் 30 திங்கட்கிழமை அதிகாலை 04.00 மணி வரை அமலில் இருக்கும்.
முன்னதாக, கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த பயணக் கட்டுப்பாடுகளை மேலும் கடுமையாக்குமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) அரசாங்கத்தைக் கோரியிருந்தது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
1
+1
+1