Pagetamil
சினிமா

போதைப் பொருள் வழக்கில் 12 சினிமா பிரபலங்களுக்கு சமன்!

தெலுங்கு திரை உலகில் போதைப் பொருட்கள் பயன்பாடு இருப்பதாக புகார் வந்ததையடுத்து, தெலுங்கானா போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார், கடந்த 2017 ஆம் ஆண்டு திடீர் சோதனை நடத்தினர். பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.30 லட்சம் மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இதனை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது. இந்த சம்பவத்தில், பிரபல இயக்குநர் பூரி ஜெகந்நாத், ஒளிப்பதிவாளர் ஷ்யாம் கே.நாயுடு, நடிகர்கள் தருண், நவ்தீப், ரவி தேஜா, நடிகைகள் சார்மி, முமைத்கான் உள்பட 12 பேர் போதைப்பொருள் பயன்படுத்தியதில் தொடர்பு இருப்பதாகத் தெரியவந்தது. இந்த வழக்கில், 62 பேர் விசாரணை செய்யப்பட் டனர். மொத்தம் 30 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் 11 பேர் தெலுங்கு சினிமா துறைக்கு நெருக்கமானவர்கள். இதில் பல கோடி பணம் கைமாறி இருக்கலாம் என்பதால் அமலாக்கத்துறை இதில் தனியாக விசாரணை தொடங்கியது. இதில் கருப்பு பணம் வெள்ளையாக்கப்பட்டதாக சந்தேகித்த அமலாக்கத்துறை, தொடர்ந்து விசாரித்து வருகிறது.

இந்நிலையில் போதைப்பொருள் வழக்கில் சினிமா துறையினர் மீது ஏற்கனவே சந்தேகம் எழுந்ததால் 12 சினிமா பிரபலங்களுக்கு அமலாக்கத்துறை இப்போது சமன் அனுப்பி உள்ளது. நடிகைகள் ரகுல் பிரீத் சிங், ராணா, ரவிதேஜா இயக்குனர் புரி ஜெகந்நாத், நடிகை சார்மி, முமைத் கான் உள்ளிட்ட பலருக்கு இந்த சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ரகுல் பிரீத் சிங் செப்டம்பர் 6 ஆம் திகதியும் ராணா செப்டம்பர் 8ஆம் திகதியும், ரவி தேஜா செப்டம்பர் 9 ஆம் திகதியும் இந்த வழக்கில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது. இதில் இவர்கள் சாட்சியங்களாக மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

“நான் சினிமாவுக்குள் வந்ததே சிலருக்கு பிடிக்கவில்லை” – சிவகார்த்திகேயன்

Pagetamil

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ ஏப்ரல் 10இல் ரிலீஸ்

Pagetamil

நடிகர் விஷாலுக்கு உடல்நல பாதிப்பு – பிரச்சினை என்ன?

Pagetamil

சாக்‌ஷி அகர்வால் திருமணம்!

Pagetamil

12 ஆண்டு பிரச்சினை தீர்ந்து வெளியாகிறது மதகஜராஜா

Pagetamil

Leave a Comment