31.3 C
Jaffna
March 28, 2024
தொழில்நுட்பம்

அறிமுகமானது Oukitel WP15 5G போன்!

Oukitel WP15 5G ரக்டு போன் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது. இது 13,200mAh பேட்றியை கொண்டுள்ள Ulefone Power Armor 13 ஸ்மார்ட்போனை தோற்கடிக்கும் முனைப்பின் கீழ் 15,600 எம்ஏஎச் பேட்றியுடன் வருகிறது. ஆக உலகத்திலேயே 5ஜி ஆதரவு கொண்ட ஒரு ஸ்மார்ட்போனில் இவ்வளவு பெரிய அளவிலான பேட்றித்திறன் இருப்பது Oukitel WP15 5G ரக்டு போனில் மட்டும் தான். Oukitel WP15 ஆனது 1300 மணிநேர ஸ்டாண்ட்-பை நேரத்தை வழங்கும் மற்றும் இதன் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவானது ஸ்மார்ட்போனை வெறும் ஐந்து மணி நேரத்தில் 0 முதல் 100 சதவிகிதம் சார்ஜ் செய்யும்.

இந்த ஸ்மார்ட்போனில் ஒரு பெரிய 15,600mAh யூனிட் இருப்பது ஒரு மோசமான டீல் அல்ல. ஏனெனில் இந்த ஸ்மார்ட்போன், நீங்கள் சாதனங்களையும் சார்ஜ் செய்ய அனுமதிக்கும் ரிவர்ஸ் சார்ஜிங்கையும் ஆதரிக்கிறது. பெரிய பேட்றி திறன் மட்டுமின்றி, WP15 ஆனது ஐபி 68 மற்றும் ஐபி 69 கே தூசி மற்றும் நீர்ப்புகா திறன்களுக்கும் மதிப்பிடப்பட்டுள்ளது. இது தண்ணீரில் 1.5 மீ ஆழத்தில் சுமார் 30 நிமிடங்கள் வரை தாக்குப்பிடிக்கும். மேலும் இது MIL-STD-810G சான்றளிக்கப்பட்டிருக்கிறது, அதாவது இது தீவிர சூழல்களில் கூட பயன்படுத்தப்படலாம்.
இந்த ரக்டு போன் மீடியாடெக் டைமென்சிட்டி 700 ப்ராசஸர், 48 எம்பி மெயின் கேமரா மற்றும் 6.52 இன்ச் எச்டி+டிஸ்ப்ளே போன்ற மற்ற சில சுவாரசியமான அம்சங்களையும் கொண்டுள்ளது.

Oukitel WP15 5G அம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகள்:
– 16.5 x 720 பிக்சல்கள் ரெசல்யூஷன்
– 6.52-இன்ச் HD+ டிஸ்ப்ளே
-செல்பீ கேமராவுக்கான வாட்டர் டிராப் நாட்ச்
– மீடியாடெக் டைமென்சிட்டி 700
– ARM மாலி G57 GPU
– 8GB ரேம் மற்றும் 128GB இன்டெர்னல் ஸ்டோரேஜ்
– TF கார்டு வழியாக 256GB வரை ஸ்டோரேஜை விரிவாக்கலாம்
– ஆண்ட்ராய்டு 11 OS
– 15,600mAh பேட்றி
– 18W ஃபாஸ்ட் சார்ஜிங்
– ரிவர்ஸ் சார்ஜிங் ஆதரவு
– ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பு
– 48MP முதன்மை சென்சார்
– 2MP இரண்டாம் நிலை கேமரா
– 0.3MP மூன்றாம் நிலை கேமரா
– 8 எம்பி செல்பீ கேமரா
– IP68, IP69K மதிப்பீடு
– MIL-STF-810G தரம்
– கஸ்டமைஸ் செய்யக்கூடிய பட்டன்கள்
– வைஃபை எக்ஸ்டென்டர்
– ஆப் ப்ரீஸர்
– NFC
– அண்டர்வாட்டர் கேமரா மோட்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

Gemini AI மொடல் அறிமுகம்: AI ரேஸில் முந்தும் கூகுள்?

Pagetamil

ருவிட்டரின் லோகோவை ‘X’ என மாற்றிய எலான் மஸ்க்!

Pagetamil

ருவிட்டருக்கு மாற்றாக மெட்டாவின் த்ரெட்ஸ் அறிமுகம்!

Pagetamil

இனி பாஸ்வேர்ட் தேவையில்லை: கூகிளின் புதிய தொழில்நுட்பம்!

Pagetamil

ருவிற்றரின் லோகோவை மாற்றினார் எலான் மஸ்க்: நீல குருவிக்கு பதிலாக நாய் படம்

Pagetamil

Leave a Comment