ஆரம்பமான பிக்பாஸ் புரொமோஷன் போட்டோ ஷூட்!

Date:

விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக்பாஸ். 4 சீசன்கள் முடிந்துவிட்ட நிலையில் விரைவில் 5வது சீசன் தமிழில் தொடங்க உள்ளது. தற்போது இதற்கான பணிகள் தொடங்கி விட்டன. போட்டியில் பங்கேற்பவர்கள் குறித்தும் அதிகாரப் பூர்வமற்ற தகவல்கள் சமூகவலைதளங்களில் உலாவ தொடங்கிவிட்டன. கொரோனா பிரச்சினையால் கடந்தாண்டு போலவே இந்தாண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சி சில மாதங்கள் தள்ளியே துவங்குகிறது. அனேகமாக அடுத்தமாதம் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே பிக்பாஸ் சீசன் 5க்கான புரொமோஷன் போட்டோ ஷூட் நிகழ்வு தொடங்க உள்ளது. இதில் கமல்ஹாசன் பங்கேற்க உள்ளார். அதோடு இந்த வார இறுதியில் பிக்பாஸ் சீசன் 5க்கான முக்கிய அறிவிப்பு ஒன்றும் வெளியாக உள்ளது. அநேகமாக இது நிகழ்ச்சிக்கான டீசராக இருக்கலாம் எனத் தெரிகிறது.

இந்த முறை பிக்பாஸ் 5 லோகோவும் மாற்றப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் கடந்த காலங்களில் நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை விட இந்த சீசனை இன்னும் சிறப்பாக கொண்டு செல்ல பல புதிய மாற்றங்களையும் செய்ய உள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

நல்லூரில் தியாக தீபம் தொடர் போராட்டம் இன்று மூன்றாவது நாளாகளும் முன்னெடுப்பு

நல்லூரில் தியாக தீபம் தொடர் போராட்டம் இன்று மூன்றாவது நாளாகளும் முன்னெடுப்பு! தியாகி...

அட்டாளைச்சேனையில் மாணவிகளை துன்புறுத்தியதாக விரிவுரையாளர் கைது

அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சி கலாசாலையின் பயிற்சி மாணவிகளுக்கு...

ஆபாசக் காணொளிகளைக் காட்டி கலாசாலை மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: 55 வயது விரிவுரையாளர் கைது

அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சி கலாசாலையின் பயிற்சி மாணவிகளுக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்