விஜய் டிவியின் முன்னணி தொகுப்பாளர்களில் ஒருவர் திவ்யதர்ஷினி என்கிற டிடி. சின்னத்திரை மட்டுமில்லாமல் வெள்ளித்திரையிலும் நடித்து வருகிறார். தற்போது முக்கிய நிகழ்ச்சிகளை மட்டும் தொகுத்து வழங்கி வரும் டிடியை சில தினங்களாக திரையில் அதிகமாக பார்க்க முடிவதில்லை. நீண்ட இடைவெளிக்கு பின் சமீபத்தில் தான் நயன்தாராவுடன் ‘நெற்றிக்கண்’ படம் குறித்த ஸ்பெஷல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். எனினும் சோஷியல் மீடியாவில் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் புகைப்படங்கள், வீடியோக்களை அப்டேட் செய்து வந்தார்.
தொடர்ச்சியாக சில மாதங்களுக்கு முன் மாலைதீவிற்கு சுற்றுப்பயணம் சென்ற டிடி அங்கிருக்கும் நீச்சல் குளத்தில் நின்று கொண்டு ஒரு போட்டோவை இப்போது வெளியிட்டார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. முன்னணி நடிகைகள் சமீப காலங்களில் அதிகமாக மாலைதீவிற்கு படையெடுத்து வருகின்றனர். அந்த லிஸ்டில் டிடியும் இணைந்தார்.