மோட்டோரோலா நிறுவனத்தின் எட்ஜ் 20 மற்றும் எட்ஜ் 20 பியூஷன் ஸ்மார்ட்போன்கள் சில நாட்களுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஸ்மார்ட்போன்கள் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது. முதற்கட்டமாக மோட்டோரோலா எட்ஜ் 20 பியூஷன் மாடல் ஆகஸ்ட் 17 ஆம் திகதி விற்பனை செய்யப்பட்டது.
அறிமுக நிகழ்விலேயே மோட்டோரோலா எட்ஜ் 20 மாடல் ஆகஸ்ட் 24 ஆம் திகதி விற்பனைக்கு வரும் என அந்நிறுவனம் அறிவித்தது. எனினும், இதன் விற்பனை திட்டமிட்டப்படி துவங்காது என மோட்டோரோலா தெரிவித்து இருக்கிறது.
எதிர்பாராத காரணங்களால் மோட்டோரோலா எட்ஜ் 20 விற்பனை திட்டமிட்டப்படி துவங்காது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. விற்பனை தாமதமாக சரியான காரணம் அறிவிக்கப்படவில்லை. சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள சிப்செட் தட்டுப்பாடு காரணமாக விற்பனை தாமதமாகி இருக்கலாம் என கூறப்படுகிறது. எட்ஜ் 20 மாடலின் புதிய விற்பனைத் திகதி இதுவரை அறிவிக்கப்படவில்லை.