ஆப்கான் மாப்பிள்ளையை நிராகரித்த நடிகை!

Date:

ஆப்கானிஸ்தானை சேர்ந்த நடிகை அர்ஷிகான், பல வருடங்களுக்கு முன்பு குடும்பத்துடன் இந்தியாவில் செட்டிலானார். ஹிந்தி பிக்பாஸ் 11வது சீசனில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமானார். இடையில் பல தொலைக்காட்சி தொடர்களில் பங்கேற்றார். தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் தயாராவதாக இருந்த மல்லி மிஸ்து என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். தி லாஸ்ட் எம்பரரர் என்ற ஹிந்தி படத்தில் நடித்தார். சில வெப் சீரிஸ்களிலும் நடித்துள்ளார். தற்போது இசை ஆல்பங்களை வெளியிட்டு வருகிறார்.

அர்ஷிகானுக்கும், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஒருவருக்கும் திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் ஏற்பாடு செய்தனர். இந்த நிலையில் ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றி உள்ளதால் திருமணத்தை அர்ஷிகான் ரத்து செய்துள்ளார். இதுகுறித்து அர்ஷிகான் கூறும்போது : ‛‛ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரருடன் அக்டோபர் மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடக்க இருந்தது. தற்போது தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றி இருப்பதால் திருமணத்தை நிறுத்திவிட்டோம். எனக்கு கணவராக வர இருந்தவரிடம் இனிமேல் நண்பர்களாக இருக்கலாம் என்று கூறிவிட்டேன். ஒரு இந்தியரை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார். அந்த கிரிக்கெட் வீரர் பற்றிய விபரங்களை அவர் வெளியிடவில்லை.

 

Share post:

spot_imgspot_img

More like this
Related

மத்தியகுழு கூட்டத்தில் வெடித்த சுமந்திரன்- சிறிதரன் மோதல்

இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்தியகுழு கூட்டத்தில் வழக்கம் போல பெரும்...

கள்ளக்காதலனுடன் இணைந்து தாயைக் கொன்ற மகள்

திரப்பனை நகர எல்லைக்குட்பட்ட அத்துங்கம சந்திப்புக்கு அருகே உள்ள ஒரு வீட்டில்...

சிறிதரன் விவகாரத்தை ஆராய 3 பேர் கொண்ட குழு

பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தொடர்பாக முன்வைக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டுகளை ஆராய்வதற்காக அவரது இணக்கப்பாட்டுடன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்