வவுனியா கனகராயன்குளம் வடக்கு கிராம சேவகருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த பெண் கிராம சேவகருக்கு காய்ச்சல் இருந்த நிலையில் புளியங்குளம் பிரதேச வைத்தியசாலையில் இன்று அன்டிஜன் பரிசோதனை மேற்கொண்டிருந்தார்.
இதன்போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.
இதனையடுத்து அவர் மற்றும் அவரது குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் மற்றும் அங்கு பணிபுரியும் சில உத்தியோகத்தர்களிற்கு கொரோனா தொற்று பீடித்துள்ளமை அண்மையில் உறுதிசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




