நடிக்கும் போது அழுதேன்: எமோஷ்னல் ஆன ரோஜா சீரியல் ஹீரோயின்

Date:

ரோஜா சீரியல் தற்போது சின்னத்திரை டிஆர்பியில் டாப் இடத்தில் இருந்து வருகிறது. ரோஜாவுக்கு பாரதி கண்ணம்மாவுக்கும் தான் டிஆர்பியில் முதலிடத்திற்கான போட்டி இருந்து வருகிறது. மேலும் அதிகமாக பாப்புலர் ஆன சீரியல் கதாபாத்திரங்கள் டாப் 5 லிஸ்டை சமீபத்தில் ஓர்மக்ஸ் வெளியிடப்பட்டது. அதில் ரோஜா தான் முதலிடம் பிடித்தார். இரண்டாம் இடத்தில் அர்ஜுன் கதாபாத்திரம் இருக்க கண்ணம்மாவுக்கு மூன்றாம் இடம் தான் கிடைத்தது.

தற்போது தற்போது ரோஜா சீரியல் 900 எபிசோடுகளை கடந்து செல்கிறது. அதற்காக ரோஜாவாக நடித்து வரும் பிரியங்கா நல்காரி பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் தான் மிகவும் எமோஷ்னலாக ஆன விஷயம் பற்றி பேசுகிறார். “சீரியலில் பாட்டி அவரை அனாதை என அடிக்கடி சொல்லும் போதும், தான் அம்மா பற்றி எமோஷ்னலாக பேசும்போது நான் நிஜமாகவே எமோஷ்னல் ஆகி விடுவேன், நிஜமாகவே கண்களில் இருந்து கண்ணீர் வரும்” என்று அவர் கூறி உள்ளார்.

ரோஜா சீரியலில் நடிக்கத் தொடங்கும் போது தமிழ் தெரியாமல் திணறியதாகவும், தற்போது நன்றாக தமிழ் பேச பழகி இருப்பதாகவும் பிரியங்கா நல்காரி கூறுகிறார்.
மேலும் 900 எபிசோடுகளை கடந்து செல்லும் ரோஜா சீரியல் 1000 எபிசோடுகளை கடக்கும்போது அதை பிரம்மாண்டமாக கொண்டாடலாம் என கூறப்படுகிறது.

spot_imgspot_img

More like this
Related

திலீபன் சிலை விவகாரத்தில் அரசின் நிலைப்பாடு தெளிவானது – டக்ளஸ்

திலீபனின் சிலை விவகாரம் தொடர்பில் அரசாங்கம் தனது நிலைப்பாட்டை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளதாக...

இந்தியத் துணைத்தூதுவர் சாய்முரளி முகாமைத்துவ, வணிக பீடத்துக்கு விஜயம்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்துக்கு, யாழ்ப்பாணத்துக்கான இந்திய...

ரணிலின் பாதுகாப்பு உத்தியோகத்தர் மீது தாக்குதல்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த உத்தியோகத்தர் ஒருவர்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்