நம்ம குஷ்புவா இது: வாயடைத்து போன ரசிகர்கள்

Date:

தமிழ் சினிமா உலகில் சில நடிகைகளுக்குத்தான் அதிகமான பிரபலமும், பெயரும் கிடைக்கும். 80 களில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருந்த நதியாவுக்கு அப்படி ஒரு பெயர் கிடைத்தது. அதன்பின் 90 களில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருந்த குஷ்புவுக்குக் கிடைத்தது.

குஷ்புவுக்குக் கோயில், குஷ்பு இட்லி என சிலை வைக்கும் அளவிற்கும், இட்லிக்குப் பெயர் வைக்கும் அளவிற்கும் பிரபலமானவர் குஷ்பு. அரசியலிலும் இறங்கி மூன்று கட்சிகள் மாறிவிட்டாலும் அவரது டுவீட்கள் மூலம் அடிக்கடி அதிரடி காட்டுபவர்.

தற்போது சினிமா, டிவி என மீண்டும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். ‘அண்ணாத்த’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தெலுங்கிலும் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார். கலர்ஸ் டிவியில் நடன நிகழ்ச்சிக்கு நடுவராகப் பங்கேற்க உள்ளார்.

இதனிடையே, கடந்த சில மாதங்களாக அவரது உடல் எடையைக் குறைக்க கடும் உடற்பயிற்சியில் ஈடுபட்டார் குஷ்பு. இருபது நாட்களுக்கு முன்னதாகக் கூட அவரது எடை குறைந்து வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று டுவீட்டி இருந்தார்.

இன்று மீண்டும் சில புகைப்படங்களைப் பகிர்ந்து, “கடின உழைப்பு அளவை அளிக்கும் போது அந்த மகிழ்ச்சியை விளக்க முடியாது,” என டபுள் ஹாட்டின் எமோஜியுடன் பதிவிட்டிருக்கிறார்.

 

 

 

அந்தப் புகைப்படங்களைப் பார்க்கும் போது, ​​’நம்புங்க மக்களே, குஷ்புதான் இது “என்றுதான் சொல்லத் தோன்றும்.

spot_imgspot_img

More like this
Related

அர்ச்சுனாவுக்கு பிடியாணை

யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனைக் கைது செய்வதற்கான பிடியாணை...

உயர்தர அனுமதி அட்டை திருத்தம் ஆகஸ்ட் 3 வரை திறந்துள்ளது

உயர்தர அனுமதி அட்டை திருத்தம் ஆகஸ்ட் 3 வரை திறந்துள்ளது 2026 ஆம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்