தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவின் போது கடமைகளில் ஈடுபடும் பொலிசாருக்கு பொறுப்பான அதிகாரிகளுக்கு தகவல் அளித்து பொலிஸ்மா அதிபர் சி.டி விக்கிரமரத்ன அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மூத்த மாகாண டிஐஜி, மாவட்ட டிஐஜி மற்றும் அந்தந்த போலீஸ் பிரிவுகளின் பொறுப்பதிகாரிகளிற்கு அனுப்பப்பட்ட அறிக்கையின்படி, பொருளாதார உற்பத்திகளை பாதிக்காத வகையில் கடமைகளைச் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதற்கேற்ப அதிகாரிகளை மேற்பார்வை செய்து வழிநடத்துமாறும் அவர் அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.




