25 சாராயப் போத்தலுடன் வவுனியாவில் ஒருவர் கைது!

Date:

மதுவரி திணைக்களத்தினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது 25 சாராயப் போத்தலுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா, கண்டி வீதியில் உள்ள பிரபல சுப்பர் மார்க்கற் முன்பாக நேற்று (20) இரவு 8.45 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கோவிட் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் நேற்று இரவு 10 மணி முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை முடக்கப்பட்டுள்ள நிலையில் மதுபானக் கொள்வனவு அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில் வவுனியா, கண்டி வீதியில் உள்ள பிரபல சுப்பர் மார்க்கற் ஒன்றிற்கு சென்ற இருவர் 25 சாராயப் போத்தல்களை கொள்வனவு செய்துள்ளனர். குறித்த போத்தலை ஒருவருடைய மோட்டர் சைக்கிளில் வைத்து கொண்டு செல்ல முற்பட்ட போது அங்கு திடீர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட மதுவரித் திணைக்கள அதிகாரிகள் 25 சாராயப் போத்தல்களை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் குறித்த நபரை கைது செய்ததுடன், சாராயப் போத்தல்களையும் பறிமுதல் செய்தனர்.

குறித்த நபரிடம் விசாரணைகளை முன்னெடுத்துள்ள மதுவரித் திணைக்கள அதிகாரிகள், குறித்த நபரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

வடமாகாண புதிய சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் கடமையேற்பு

வடமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸமா அதிபர் தினேஸ் கருணாணாயக்க இன்றையதினம் தனது...

முன்னாள் அமைச்சரின் மனைவி மாடியிலிருந்து தவறிவிழுந்து பலி

முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமாரவின் மனைவி, 55 வயதான தேஷானி குணரத்ன,...

திடீர் ஆய்வில் பயன்பாட்டிற்கு தகுதியற்ற 28 வாகனங்கள் சிக்கின

தலவாகல்ல பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டபோது, ​​28 வாகனங்கள் இயக்கத்திற்குத் தகுதியற்றவை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்