நயன்தாரா ரூமுக்கு பக்கத்திலேயே பிரபுதேவா ரூம்: ஒரு இரவு கழிந்த பின்னரே தகவலறிந்து பீதியான விக்னேஷ் சிவன்!

Date:

நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஜோடி நீண்ட வருடமாக காதலித்து வருகிறது. சமீபத்தில் இந்த ஜோடி நிச்சயதார்த்தமும் செய்து கொண்டதாக அறிவித்துள்ளனர்.

இருந்தாலும், நயன்தராவின் பழைய காதல் கிசுகிசுக்கள் இப்போதும் புதிதுபுதிதாக கிளம்பியபடிதான் இருக்கிறது. நயன்தரா ஆரம்பத்தில் சிம்புவுடனும், பிரபுதேவாவுடனும் உறவில் இருந்தார். அந்த சமயத்தில் நடந்ததென்றும், அவர்களுடன் தொடர்புபட்டதென்றும் பல செய்திகள் வந்தபடியிருக்கிறது.

அந்த வகையில் தற்போது சுவாரஸ்யமான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

தற்போது விக்னேஷ் சிவன் இயக்கிவரும் காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் நயன்தாரா நடித்து வருகிறார். இந்த படத்தில் நயன்தாராவுக்கு ஜோடியாக விஜய் சேதுபதி நடிக்கிறார். இன்னொரு கதாநாயகியாக சமந்தா நடித்து வருகிறார். காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக பாண்டிச்சேரியில் நடைபெற்று வருகிறது. அங்குதான் ஒரு டிவிஸ்ட்.

அதே பாண்டிச்சேரியில்தான் பிரபுதேவா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்புகள் நடைபெற்று வருகிறது. குலேபகாவலி என்ற படத்தை எடுத்த கல்யாண் இயக்கத்தில் அந்த படம் விறுவிறுப்பாக உருவாகிக் கொண்டிருக்கின்றது.

இந்நிலையில் பிரபுதேவா தங்கியிருக்கும் ஹோட்டலில் தான் நயன்தாராவுக்கும் படக்குழுவினர் ரூம் போட்டுக் கொடுத்துள்ளார்கள். அதுவும் ஒரே தளத்தில் பக்கத்து பக்கத்து அறையை புக் செய்து விட்டார்களாம். இது நயன்தாராவுக்கும் தெரியாது, பிரபுதேவாவுக்கும் தெரியாது.

ரூம் போட்டு ஒருநாள் தங்கி விட்டார்கள். அடுத்த நாள்தான் விக்னேஷ் சிவனுக்கு விடயம் தெரிய வந்ததாம், பிரபுதேவா இந்த ஹோட்டலில் இருக்கிறார் என்று.

இதனால் நயன்தாராவை எப்படி பிரபுதேவாவிடம் இருந்து காப்பாற்றுவது என படம் எடுப்பதை விட அதிகமாக யோசித்துக் கொண்டிருக்கிறாராம் விக்னேஷ் சிவன்.

spot_imgspot_img

More like this
Related

நெஞ்சில் கையடக்க தொலைபேசி வைத்து உறங்கிய இளைஞன் கையடக்க தொலைபேசி வெடித்து உயிரிழப்பு

கல்குடா கருங்காலிச்சோலை பகுதியில் கையடக்க தொலைபேசியை சார்ஜ் செய்தவாறு மார்பில் வைத்து...

பெருமளவு போதைப்பொருளுடன் அழகுநிலைய ஜோடி கைது!

மாத்தறையில் அழகு நிலையம் நடத்தி வரும் தம்பதியினர், சுமார் 7 கோடி...

நேபாள பெருவெள்ளம்: இதுவரை 359 பேர் உயிரிழப்பு; 800+ பேரை தேடும் பணி தீவிரம்

நேபாள வெள்ளப் பெருக்கில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 359 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்