ஆப்கானிஸ்தானின் காபூல் விமான நிலையத்தின் தடுப்புச் சுவரைத் தாண்டி அமெரிக்க இராணுவ வீரர்கள் குழந்தை ஒன்றைத் தூக்கும் காணொளி உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அணையாடை (diaper) அணிந்திருந்த அந்தக் குழந்தை, விமான நிலையத்தினுள் நுழையக் காத்திருந்த கூட்டத்திலிருந்து ஒரு கையால் தூக்கப்பட்டது. அந்த வீடியோவை பார்த்த பலரும் இதயம் நொருங்கிப் போனதாக சமூக ஊடகங்களில் குறிப்பிட்ட, குழந்தையின் கதி என்ன என கேள்வியெழுப்பியிருந்தனர்.
அந்தக் குழந்தை உடல்நலமின்றி இருந்ததாகவும், அதற்கு உதவும்படி அமெரிக்க ராணுவ வீரர்களிடம் தெரிவிக்கப்பட்டதாகவும் அமெரிக்க இராணுவம் விளக்கமளித்துள்ளது.
“வீடியோவில் சித்தரிக்கப்பட்டுள்ள சீருடை அணிந்த உறுப்பினர் 24 வது மரைன் எக்ஸ்பெடிஷனரி யூனிட் மரைன் என்பதை என்னால் உறுதிப்படுத்த முடியும்” என்று மரைன் கார்ப்ஸ் செய்தித் தொடர்பாளர் மேஜர். ஜிம் ஸ்டெங்கர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
Heartbreaking 💔
An Afghanistan mother handing her baby to a US Marine. pic.twitter.com/yZJk4nxmRF
— Nigel D'Souza (@Nigel__DSouza) August 20, 2021
“காணொளியில் காணப்பட்ட குழந்தை அந்த இடத்திலுள்ள மருத்துவ சிகிச்சை நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு மருத்துவ நிபுணர்களால் பராமரிக்கப்பட்டது.”
குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு தனது தந்தையுடன் மீண்டும் இணைந்ததாகவும், இருவரும் விமான நிலையத்தில் பாதுகாப்பாக இருப்பதாகவும் அவர் கூறினார்.