மன்னாரில் 20 நாளில் 356 தொற்றாளர்கள்!

Date:

மன்னார் மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லுகின்ற நிலையில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை(20) மாலை மேலும் புதிதாக 29 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் இன்று சனிக்கிழமை (21) காலை விடுத்துள்ள கொரோனா நிலவர அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,

மன்னார் மாவட்டத்தில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை(20) மாலை மேலும் 29 கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக வந்த போது மேற்கொள்ள பீ.சி.ஆர்.பரிசோதனைகளின் 16 தொற்றாளர்களும், சமூகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆன்டிஜன் பரிசோதனைகளின் போது 13 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் முசலி பிரதேசச் செயலகத்தில் 4 தொற்றாளர்களும், நானாட்டான் பிரதேச சபையில் 2 தொற்றாளர்களும், விடத்தல் தீவு பிரதேச வைத்தியசாலையில் 2 தொற்றாளர்களும், தலைமன்னார் பிரதேச வைத்தியசாலையில் 2 தொற்றாளர்களும், மன்னார் ஆடைத் தொழிற்சாலையில் 2 தொற்றாளர்களும், முருங்கன் தள வைத்தியசாலையில் 1 தொற்றாளர் இவ்வாறு ஆன்டிஜென் பரிசோதனை மூலம் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இம் மாதம் முதலாம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை 356 கொரோனா தொற்றாளர்களும், இவ்வருடம் மாத்திரம் 1380 தொற்றாளர்களும், மன்னார் மாவட்டத்தில் மொத்தமாக 1397 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மாவட்டத்தில் தற்போது வரை 13 கொரோனா மரணங்கள் நிகழ்ந்துள்ளது என குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

உடல் பருமன், ரத்தக் கொதிப்பு, நீரிழிவு நோய்கள் இருந்தால் அமெரிக்க விசா கிடையாது

இதய நோய், சுவாசக் கோளாறு, புற்றுநோய், நீரிழிவு, ரத்தக் கொதிப்பு, உடல்...

கறுப்பு யூலை: கற்காத பாடங்கள் நூல் அறிமுக நிகழ்வு

வடலி வெளியீட்டினரால் வெளியிடப்பட்ட தெ.ஞாலசீர்த்தி மீநிலங்கோ அவர்கள் எழுதிய கறுப்பு யூலை:...

யாழில் போதை நுகர்ந்த 3 பேர் சிக்கினர்

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளை நுகர்ந்து கொண்டிருந்த மூன்று பேர் கையும் களவுமாக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்