தலை முடி சொல்லும் ஆரோக்கியம் இதோ!

Date:

தலை சீவும்போது முடிகள் அதிகமாக உதிர்ந்தால் மன அழுத்தம், காய்ச்சல், நீரிழிவு போன்ற பாதிப்புகள் இருக்கலாம். சிலவகை மருந்துகளை சாப்பிட்டுக் கொண்டிருந்தாலும் பக்கவிளைவுகள் தோன்றி அதனாலும் முடிகள் உதிரலாம்.

கூந்தலின் தோற்றப்பொலிவு, அதன் மிருதுத் தன்மை, அடர்த்தி போன்றவற்றை வைத்து உடல் ஆரோக்கியத்தையும் மதிப்பீடு செய்யவிடலாம். கண்ணாடி முன்பு சில நிமிடங்கள் நின்று தலைமுடியை பரிசோதித்தாலே சிலவிதமான நோய்பாதிப்புக்கான அறிகுறிகளைக் கண்டறிந்துவிடலாம்.

தலைமுடிக்கு ‘ஹேர் டை’ பூசினாலோ, குளோரின் கலந்த நீரில் நீச்சல் அடித்தாலோ கூந்தல் உலர்ந்துவிடலாம். முடி வறட்சி, பொலிவின்றி மெலிந்து காணப்படுவது போன்ற பல்வேறு சிக்கல்களை உருவாக்கும்.

வறண்ட சருமம், தோல் அழற்சி, தலையில் அரிப்பு காரணமாக ஏற்படும் பொடுகு தொல்லை தோன்றும். மன அழுத்தம், நோய் எதிர்ப்பு சக்தி குறைவு, நரம்பியல் கோளாறு போன்றவைகளாலும் பொடுகு ஏற்படுகிறது.

தலை சீவும்போது முடிகள் அதிகமாக உதிர்ந்தால் மன அழுத்தம், காய்ச்சல், நீரிழிவு போன்ற பாதிப்புகள் இருக்கலாம். சிலவகை மருந்துகளை சாப்பிட்டுக் கொண்டிருந்தாலும் பக்கவிளைவுகள் தோன்றி அதனாலும் முடிகள் உதிரலாம்.

சரும அழற்சி ஏற்பட்டிருந்தால் உச்சந்தலையில் அரிப்பு ஏற்படுவது, திட்டுக்கள் தோன்றுவது, மஞ்சள் நிறத்தில் செதில்கள் தென்படுவது போன்ற தோற்றங்கள் தோன்றும்.

தலைமுடி நரைப்பதற்கு மரபணுக்களும் காரணமாக உள்ளன. எனினும் மன அழுத்தம், எதிர்பாராத அதிர்ச்சி போன்றவற்றால் சிலருக்கு தலைமுடி நரைக்கும். மன அழுத்தத்தால் நிறமிகளை உருவாக்கும் செல்கள் பாதிப்படையும். அதனால் விரைவாக தலைமுடி நரைக்க ஆரம்பிக்கும்.

கூந்தலுக்கு ரசாயன சிகிச்சை மேற்கொள்வது முடிக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. மேலும் கூந்தலுக்கு வண்ண சாயங்கள் பூசுவது, கூந்தலை சூடுபடுத்துவது போன்ற செயல்களும் முடிகள் உடைவதற்கு அனுமதிக்கப்படுகிறது. முடி உதிர்வுக்கும் நீரிழிவு நோய்க்கும் தொடர்பு உள்ளது. சிலருக்கு கண் இமைகளில் இருக்கும் முடிகளும் உதிர தொடங்கும். இத்தகைய பாதிப்பு நேர்ந்தால் முறையான சிகிச்சை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

தமிழக முதல்வராக பதவியேற்றார் ஜோசப் விஜய்!

தமிழக முதல்வராக பதவியேற்றார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய். சென்னை...

சமூகலைத்தள மூளைச்சலவை: விஜய் வெற்றிக்கு பின்னாலிருந்த ரூட் நிறுவனம்!

திரையுலகில் நடிகராக உச்சம் தொட்ட விஜய், இன்று தமிழக அரசியலில் தனது...

தவெக முதற்கட்ட அமைச்சரவை பட்டியல் வெளியீடு

தமிழக வெற்றிக் கழக அரசின் தவெக முதற்கட்ட அமைச்சர் பட்டியலை ஆளுநர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்