25.7 C
Jaffna
December 11, 2024
Pagetamil
விளையாட்டு

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் தொடர்: நிர்வாகம் அறிவிப்பு!

ஐபிஎல் 14ஆவது சீசன் ஏப்ரல் 9ஆம் தேதி துவங்கி சிறப்பாக நடைபெற்று வந்த நிலையில் கொல்கத்தா அணி வீரர்கள் வருண் சக்ரவர்த்தி, சந்தீப் வாரியர் உட்பட சில வீரர்களுக்கு கொரோனா கண்டறியப்பட்டதால் தொடர் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டது. மொத்தம் 29 போட்டிகள்தான் நடத்தப்பட்டது. 31 போட்டிகள் எஞ்சியிருந்தது.

மீதமுள்ள இந்த 31 போட்டிகளும் எப்போது நடைபெறும் என அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19 முதல் களைகட்ட போகும் ஐபிஎல் தொடர்: நிர்வாகம் அறிவிப்பு!அக்டோபர் 15 வரை நடைபெறும் என பிசிசிஐ அறிவித்தது. இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் உட்பட சில ஐபிஎல் அணிகள் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்று தனிமை முகாமில் இருக்கின்றன. சிஎஸ்கே விரைவில் பயிற்சியைத் துவங்கும் என எதிர்பார்க்கிறது. போட்டிகள் திட்டமிட்டபடி நடைபெறுவதில் எவ்வித சிக்கல் இருக்காது என கூறப்படுவதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.

இந்த மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும் வகையில் ஐக்கிய அரபு அமீரக கிரிக்கெட் வாரியம், ஒரு சூப்பர் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. ஆம், இந்தியாவில் பார்வையாளர்கள் இல்லாமல் நடைபெற்ற ஐபிஎல் தொடர், ஐக்கிய அரபு அமீரகத்தில் ரசிகர்களுடன் நடைபெறும் என்ற அறிவிப்புதான் அது. இதுகுறித்துப் பேசிய ஐக்கிய அரபு அமீர கிரிக்கெட் வாரிய பொதுச் செயலாளர் உஸ்மானி, “ஐபிஎல் தொடரின்போது பார்வையாளர்களை அனுமதிப்பது தொடர்பாக கடந்த சில நாட்களாக பேச்சு வார்த்தை நடத்தி வருகிறோம். எங்களைப் பொறுத்தவரை வீரர்கள், ரசிகர்களின் பாதுகாப்புதான் முதன்மையானது. தற்போது அமீரகத்தில் உள்ள அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டதால், ஐபிஎல் தொடரின்போது பார்வையாளர்களை அனுமதிக்க விரும்புகிறோம்.

நிச்சயம் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள். பிசிசிஐயும் இதைத்தான் விரும்புகிறது” எனத் தெரிவித்தார். மொத்தம் 60 சதவீத பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: தென் ஆப்பிரிக்க அணி முதலிடம்

Pagetamil

அடிலெய்ட் டெஸ்ட் போட்டியை இரண்டரை நாட்களில் முடித்த அவுஸ்திரேலியா வெற்றி!

Pagetamil

கஸ் அட்கின்சன் ஹட்ரிக் சாதனை: சரண் அடைந்த நியூஸிலாந்து அணி!

Pagetamil

வினோத் காம்ப்ளிக்கு உதவ முன்வந்த ‘1983 உலகக் கோப்பை’ வெற்றி நாயகர்கள்!

Pagetamil

வழக்கமான ஃபோர்முக்கு திரும்பியது இலங்கை: வெறும் 42 ஓட்டங்களில் சுருண்டது!

Pagetamil

Leave a Comment