25.7 C
Jaffna
January 19, 2025
Pagetamil
மருத்துவம்

நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய உணவுகள்!

அரிசியை நாம் முற்றிலுமாக தவிர்த்து விட முடியாது. ஏனெனில் நம்முடைய உணவு வகைகளில் சாதம், தோசை, இட்லி போன்ற அனைத்து உணவுகளுமே அரிசியால் செய்யப்படுவதாகும்.

நீரிழிவு நோயாளிகள் உணவு விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். அந்த வகையில் நீரிழிவு நோயாளிகள் அரிசி அல்லது கோதுமை இவை இரண்டில் எந்த உணவை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

அரிசியை நாம் முற்றிலுமாக தவிர்த்து விட முடியாது. ஏனெனில் நம்முடைய உணவு வகைகளில் சாதம், தோசை, இட்லி போன்ற அனைத்து உணவுகளுமே அரிசியால் செய்யப்படுவதாகும். அதனால் அரிசியை முழுவதுமாக தவிர்க்க வேண்டிய அவசியமில்லை.

அரிசியையும், கோதுமையும் ஒப்பிட்டு பார்க்கும்போது இரண்டிலுமே கார்போஹைட்ரேட் தான் உள்ளது. ஆனால் அரிசியுடன் ஒப்பிடும்போது கோதுமை உணவுகளை எடுத்துக்கொள்ளும்போது சர்க்கரை கூடும் அளவு சற்று குறைவாக இருக்குமே தவிர (சர்க்கரையை பொறுத்தவரை) அதிகளவு வித்தியாசம் இருக்காது. ஆனால் இது இரண்டிலும் ஊட்டச்சத்துக்களில் வித்தியாசம் உள்ளது.

அதாவது கோதுமையில் புரோட்டீன் சற்று அதிகமாக உள்ளது. மற்றபடி வேறு எந்த வித்தியாசமும் இல்லை. அதனால் நீரிழிவு நோயாளிகள் சாதம், தோசை, இட்லி போன்ற உணவுகளை எடுத்துக்கொள்ளலாம். ஆனால் அரிசியோ கோதுமையோ எதுவாக இருந்தாலும் கார்போஹைட்ரேட்டின் அளவை குறைத்து அதற்கு பதிலாக உணவில் அதிக அளவு காய்கறிகளை சேர்த்து கொண்டு புரோட்டீன் அளவை அதிகப்படுத்துவது நல்லது என்று கூறினார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஒழுங்கற்ற தூங்கும் முறை நீரிழிவு நோயின் அபாயத்தை அதிகரிக்கும்: ஆய்வு

Pagetamil

ஐந்தில் ஒரு பெண்கள் வாழ்நாளில் ஒரு முறையும் உடலுறவில் உச்சக்கட்டத்தை அனுபவிப்பதில்லை!

Pagetamil

புரையேறும் போது தலையில் தட்டலாமா?

Pagetamil

டாக்டர் ஞானப்பழத்தை கேளுங்கள்!

Pagetamil

மூட்டுவலி உள்ளவர்கள் தரையில் உட்காரக்கூடாது என்பது உண்மையா?

Pagetamil

Leave a Comment