சூப்பரான வெண்டைக்காய் சாதம் ரெடி!

Date:

10 நிமிடத்தில் செய்யலாம் வெண்டைக்காய் சாதம்

வெண்டைக்காயில் உடலுக்கு தேவையான சத்துக்கள் இருப்பதோடு உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. தினமும் வெண்டைக்காய் சாப்பிட்டு வந்தால் கல்லீரல் நன்கு செயல்படத் தொடங்கும்.

தேவையான பொருட்கள்:

உதிரியாக வடித்த சாதம் – 1 1/2 கப்

வெண்டைக்காய் – 100 கிராம்

சின்ன வெங்காயம் – 50 கிராம்

கெட்டியான புளிக்கரைசல் – 1 டீஸ்பூன்

மஞ்சள்தூள் – 1/2 டீஸ்பூன்

மிளகுத்தூள் – 1 டீஸ்பூன்

கடலை பருப்பு – 1 டீஸ்பூன்

முந்திரி பருப்பு – 10

கடுகு – 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிதளவு

எண்ணெய் – 1 டீஸ்பூன்

உப்பு – சுவைக்கேற்ப

 

செய்முறை:

வெங்காயம், வெண்டைக்காயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயத்தை இட்டு பொன்னிறமாக வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் வெண்டைக்காய், உப்பு சேர்த்து மிதமான தீயில் 10 நிமிடங்கள் வதக்கவும்.

அடுத்து அதில் மஞ்சள்தூள், கறிவேப்பிலை, பட்டை பொடி, மிளகுத்தூள், உப்பு, கெட்டியான புளிக்கரைசல் சேர்த்து வெண்டைக்காயை நன்றாக கிளறி விட்டு வேக வைக்கவும்.

மற்றொரு கடாயை எடுத்து 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, கடலை பருப்பு, முந்திரி இட்டு பொரிந்ததும் அதில் வெண்டைக்காயைச் சேர்க்கவும்.

அதனுடன், வேக வைத்த சாதத்தை சேர்த்து நன்றாக கலக்கவும்.

குறைவான தீயில் 5 நிமிடங்கள் கிளறி விட்டு உப்பு சரிபார்த்து அடுப்பில் இருந்து இறக்கி பரிமாறவும்.

spot_imgspot_img

More like this
Related

நாடாளுமன்றத்தில் எனது இறுதிநாட்கள் இவை: ஊசி அர்ச்சுனா!

தனது அரசியல் எதிர்காலம் குறித்துப் பேசிய யாழ் மாவட்ட சுயேச்சை நாடாளுமன்ற...

ஹோமாகம தலைக்கவச தொழிற்சாலையில் தீ: 5 பேர் பலி

இன்று காலை (21), ஹோமாகம தொழிற்பேட்டையில் உள்ள தலைக்கவசத் தொழிற்சாலை ஒன்றில்...

அதிபர்களுக்கு அநீதி : கிழக்கு ஆளுநர் செயலகம் முன்னாள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடங்கியது!

கிழக்கு மாகாணத்தில் நீண்டகாலமாக கடமைநிறைவேற்று அதிபர்களாக பணியாற்றி வரும் கல்வியாளர்களுக்கு இழைக்கப்பட்டுவரும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்