தலிபான்களுக்கு ஆதரவாக பேசியதாக எம்.பி.மீது தேச துரோக வழக்கு பதிவு!

Date:

தலிபான்களுக்கு ஆதரவு: எம்.பி.மீது தேச துரோக வழக்கு பதிவு!

 தெற்கு ஆசிய நாடான ஆப்கானிஸ்தானில், தலிபான் அமைப்பினர் ஆட்சியைக் கைப்பற்றி உள்ளனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை காணப்படுகிறது. ஆட்சி அமைக்கும் பணியில் தலிபான்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

 இதை அடுத்து தலிபான்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் நபர்களின் பேஸ்புக் கணக்குகள் முடக்கப்படும் என்றும் பேஸ்புக் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதே போல் தலிபான் அமைப்பினரின் வாட்ஸ் அப் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன.

 தொடர்ச்சியாக, ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி கைப்பற்றியது குறித்து கருத்துத் தெரிவிக்கப்பட்ட உத்தர பிரதேச மாநிலம் சம்பால் மக்களவைத் தொகுதி எம்.பி. தங்கள் நாட்டை தாங்களே ஆள எண்ணுகின்றனர். அது அவர்களின் உள்நாட்டு விவகாரம். அதில் நாம் எப்படி தலையிட முடியும்? என்றார்.

 இந்திய சுதந்திர போராட்ட வீரர்களுடன் தலிபான்களை ஒப்பிட்டு பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பின்னர், சமாஜ்வாதி எம்.பி., ஷபீகூர் ரகுமான் பார்க் மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

 தொடர்ந்து, இது குறித்து விளக்கம் அளித்த சமாஜ்வாதி எம்.பி., ஷபீகூர் ரகுமான் பார்க், இந்திய சுதந்திர போராட்ட வீரர்களுடன் தலிபான்களை ஒப்பிட்டு பேசவில்லை. எனது கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. நான் இந்தியக் குடிமகன். எனது அரசின் கொள்கைகளை நான் ஆதரிக்கிறேன் என்றார்.

spot_imgspot_img

More like this
Related

அர்ச்சுனாவுக்கு பிடியாணை

யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனைக் கைது செய்வதற்கான பிடியாணை...

உயர்தர அனுமதி அட்டை திருத்தம் ஆகஸ்ட் 3 வரை திறந்துள்ளது

உயர்தர அனுமதி அட்டை திருத்தம் ஆகஸ்ட் 3 வரை திறந்துள்ளது 2026 ஆம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்