26.6 C
Jaffna
January 7, 2025
Pagetamil
லைவ் ஸ்டைல்

கொத்தமல்லி மஞ்சளை வைத்து சருமத்தை பாதுகாக்க!

முன்னோர்கள் காலத்தில் ஒளிரும் சருமத்தின் பின்னால் இருக்கும் அதிசயம் பாரம்பரிய பொருட்கள் தான். இன்றும் அழகான பெண்களின் ரகசியம் பாரம்பரிய பொருட்களை பயன்படுத்துவது தான். இவை சரும அழகுக்கும், கூந்தலுக்கும் மட்டும் அல்லாமல் அதன் ஆரோக்கியம் குறையாமல் காக்கலாம். அப்படி பயன்படுத்தகூடிய ஃபேஸ் பேக் என்ன என்று பார்க்கலாம்.

கரும்புள்ளியை போக்கும் கொத்துமல்லி மற்றும் மஞ்சள் தூள் ஃபேஸ் பேக்

கொத்துமல்லி இலைகள் மற்றும் மஞ்சள் தூளின் ஃபேஸ் பேக் முகத்தில் குறிப்பாக மூக்கில் இருக்கும் அதிகப்படியான கரும்புள்ளிகளுக்கு சிறந்த தீர்வாக அமைகிறது. இந்த பேக் பயன்படுத்தும் போது அது சருமத்தின் பெரிய துளைகளை சுருக்கமாக செய்கிறது. கொத்துமல்லி அழுக்கை சுத்தம் செய்யும் வேலையை திறன்பட செய்கிறது. சருமத்தின் துளைகளை தடுக்கிறது. மஞ்சள் சரும துளைகளில் உள்ள அதிகப்படியான எண்ணெயை வெளியேற்ற முடிகிறது. கொத்துமல்லி இலைகளை பேஸ்ட் ஆக்கி மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக பேஸ்ட் ஆக்கவும். இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி இரவு முழுவதும் விட்டுவிடவும். மறுநாள் குளிர்ந்த நீரில் கழுவி விடவும். கரும்புள்ளிகளை போக்க வாரத்தில் இரண்டு நாட்கள் செய்தால் காணாமல் போகும்.

வறண்ட சருமத்தை போக்கும் தயிர் மற்றும் கடலை மாவு

தயிர் வறண்ட சருமத்தை போக்க உதவும். இறந்த சரும செல்களை அகற்றி அற்புதமான வழியை உருவாக்குகிறது. தோல் மற்றும் தயிர் சுத்திகரிப்பு முகவராக கடலை மாவு செயல்படுகிறது. இரண்டு டீஸ்பூன் கடலை மாவுடன் பசுந்தயிர் கெட்டித்தயிர் கலந்து அதில் தேன் மற்ற மஞ்சள் மஞ்சள் கலந்துவிடவும். இதை தொடர்ந்து செய்து வறண்ட சருமம் நீங்கும். தயிர் ஒரு இயற்கையான மாய்சுரைசர், தேன் உங்கள் சருமத்தை சுத்தப்படுத்துகிறது. மேலும் மஞ்சள் சருமத்தின் பிஹெச் அளவை பராமரிக்கும் கிருமி நாசினியாக செயல்படுகிறது. இவை அனைத்தும் உங்கள் சருமத்தை வறட்சியிலிருந்து போக்கும்.

பருக்கள் போக முல்தானிமிட்டி உடன் எலுமிச்சை சாறு

முல்தானிமிட்டி முகப்பரு மற்றும் கறைகளுக்கு எதிரான குணப்படுத்தும் பண்புகளுக்கு பெயர் கிடைத்தது. மெக்னீசியம் குளோரைடு அதிகம் உள்ள இது முகப்பரு வடுக்களை குறைத்து சருமத்தை சுத்தமாக வைத்திருக்கிறது. சருமத்தின் பிஹெச் அளவை பராமரிக்க மஞ்சள் ஆண்டிசெப்டிக் கொண்டுள்ளது. எலுமிச்சையில் இருக்கும் அமில உள்ளடக்கம் அழுக்கை வெளியேற்றி சருமத்தின் கிருமியை வெளியேற்றி சருமத்தை சுத்தமாக வைத்திருக்கிறது.அரை டீஸ்பூன் சந்தனப்பொடி, எலுமிச்சைசாறுடன் மென்மையான பேஸ்ட் உருவாக்கவும். சரும வகையை பொறுத்து பால் சேர்க்கலாம். இந்த ஃபேஸ் பேக்கை முகத்தில் தடவி காய்ந்து போகும் வரை வைக்கவும். பிறகு குளிர்ந்த நீரில் கழுவி விடவும்.

சரும நிறத்தை மேம்படுத்தும் குங்குமப்பூ ஃபேஸ் பேக்

குங்குமப்பூ சருமத்தை குணப்படுத்தும் பண்புகளை கொண்டுள்ளது. இது இரும்பு, பொட்டாசியம், கால்சியம், செலினியம், துத்தநாகம் மற்றும் தாமிரம், வைட்டமின் ஏ, ஃபோலிக் அமிலம் நியாசின் மற்றும் வைட்டமின் சி உள்ளிட்டவையும் அடங்கியுள்ளது. இது இருண்ட வட்டங்கள் மற்றும் மெல்லிய கோடுகளை அகற்றும். குங்குமப்பூவை எடுத்து இரண்டு டீஸ்பூன் தண்ணீரில் ஊறவிடவும். தண்ணீர் தங்க மஞ்சள் நிறமாக மாறும். குங்குமப்பூ ஊற்றப்பட்ட தண்ணீரில் பால், சிறிது சர்க்கரை, சில துளி தேங்காயெண்ணெய் கலக்கவும். இந்த கலவையை காட்டனில் நனைத்து முகத்தில் தடவி பிறகு 15 நிமிடங்கள் கழித்து முகத்தை உலரவைத்து சுத்தமான நீரில் கழுவி எடுக்கவும். வாரத்தில் மூன்று முறையாவது இதை செய்யுங்கள்.

 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வரும் காதலர் தினத்தில் உங்கள் காதலை முன்மொழிய வெற்றிகரமான சூத்திரம் இதுதான்!

Pagetamil

கோழி இறைச்சியை சமைப்பதற்கு முன் கழுவக்கூடாதா?

Pagetamil

பருவமடைந்த, பிரசவித்த பெண்களுக்கான பிரத்யேக உணவுகள்!

Pagetamil

கணவாய் வறுவல்

Pagetamil

வெங்காயத் தாளில் 10 விதமான ரெசிப்பி!

Pagetamil

Leave a Comment