யுவதியுடன் சென்று வாய் காட்டிய 2 இளைஞர்கள் கைது!

Date:

வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் உள்ள தனியார் பற் சிகிச்சை நிலையத்தில் குழப்பம் விளைவித்ததாக இரு இளைஞர்கள் வவுனியா பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (18) மதியம் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, வைரவபுளியங்குளம், வைரவகோவில் வீதியில் உள்ள தனியார் பற் சிகிச்சை நிலையத்திற்கு யுவதி ஒருவர் சென்றுள்ளார. அங்குள்ள நடைமுறை பற்றி கூறிய போது வைத்தியசாலையில் கடமையில் இருந்த பணியாளர்களும் குறித்த யுவதிக்கும் இடையில் வாய்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த வைத்தியசாலை வைத்தியரும் அவ்விடத்திற்கு வந்து யுவதியுடன் உரையாடிய போது முரண்பாடு ஏற்பட்டுள்ளது. கடும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டதையடுத்து அங்கிருந்து சென்ற யுவதி தனது உறவினர்களான இளைஞர்கள் இருவரை அழைத்து வந்து தகராற்றில் ஈடுபட்டுள்ளார்.

இதன்போது குறித்த தனியார் பற்சிகிச்சை நிலைய வைத்தியர் வவுனியா பொலிசாருக்கு அறிவித்தையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் 24 மற்றும் 25 வயதுடைய தவசிகுளம் பகுதியைச் சேர்ந்த இரு இளைஞர்கைளை கைது செய்துள்ளனர்.

அவர்களின் விசாரணைகளை மேற்கொண்ட பின் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

மதுபானசாலைகளற்ற வலி வடக்கில் மதுபானசாலைக்கு அனுமதியா?” — வீதியில் இறங்கிய மக்கள்

மதுபானசாலைகளற்ற பிரதேசமாக காணப்படும் வலி வடக்கில் புதிய மதுபானசாலைக்கு அனுமதி வழங்கப்படுவதற்கு...

“திலீபன் சிலை எங்கே?” — யாழ் மாநகர சபை அமர்வில் வெடித்த கடும் வாக்குவாதம்!

தியாக தீபம் திலீபனின் பிரதான நினைவுத் தூபியில் வைக்கப்பட்டிருந்த திலீபனின் சிலை...

சவுதி விமான நிலைய தாக்குதல்களில் 3 பேர் பலி

சவூதி அரேபியாவின் ரியாத் மற்றும் அப்கா ஆகிய இடங்களில் உள்ள விமான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்